198 38 இராமன் - பன்முக நோக்கில் உயிரை விட்டான் என்று வரும் பழி ஏற்றுக்கொள்ளத் தக்கதோ' "நம்மைப் பற்றியுள்ள இப் பூதத்தின் கையையும், வாயையும் வாளால் துணிப்பதே கருமம்" என்று முன்னேறிய இலக்குவனைத் தடுத்து இராமன் முன்னேற இருவருமாகக் கவந்தனைக் கொன்றனர். நான் இறப்பதே சாலும் என்ற முடிவுடன் பேசிய அண்ணனைத் தகவுடைத் தம்பி, பழிவரும் என்ற அச்சத்தை அண்ணன் மனத்தில் ஏற்றுகிறான். 'புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்' (புறநா. 182) என்ற புறநானூற்றடிகள் பன்னெடுங்காலமாக இத் தமிழர் கொண்டிருந்த கொள்கையை வலியுறுத்துகிறது. மேலே கண்ட இரண்டு பாடல்களிலும் இக் கருத்தைத்தான் இலக்குவன் கூற்றாகக் கம்பன் பாடுகிறான். இதுவரை பல இடங்களில் இராமனும் இலக்குவனும் உரையாடியதைக் கண்டு வந்துள்ளோம். இராமன் பரம் பொருளின் அவதாரம் என்ற கருத்தைப் பிராட்டிக்கு கூறினானே தவிர, நேரிடையாக இராமனிடம் பேசும்பொழுது இதுவரை அவன் கூறியதில்லை. அப்படியிருக்க முற்றிலும் மனமுடைந்த நிலையில் இருக்கும் இராகவன் இனி நான் வாழ்ந்து பயன் என்ன ? இப் பூதத்திற்கு உணவாகி விடுகிறேன்! என்று பேசியது இலக்குவனைத் திடுக்கிடவைத்துவிட்டது. இந்த அளவிற்கு இராகவன் இற(ர)ங்கி விடுவான் என்பதை எதிர்பாராத இலக்குவன் இராமனுக்கு ஒர் அதிர்ச்சி மருத்துவம் செய்ய முனைகின்றான். "அண்டங்களும் தேவர்களும் அழிகின்ற மகாபிரளய காலத்திலும் நீ ஒருவன் தானே இருக்கப் போகிறாய். அப்படிப்பட்ட நீ பூதத்திற்கு இரையாவேன் என்று சொல்வது என்ன நியாயம்?” (3673) என்று சொல்லித் தன் தமையனின் தளர்ச்சி நிலையை ஒழிக்க முனைகிறான். அப்படிச் சொல்லும்போதே இராமனைப் பரம்பொருளாகத் தான் உணர்ந்துள்ள கருத்தை யும் புலப்படுத்துகிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/216
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை