தம்பியரும் இராமனும் ே 199 இராமனும் பரம்பொருளுணர்வும் கவந்தன், விராதன், கருடன், இந்திரன் முதலியவர்கள் இராமனைப் பரம்பொருள் என்று சொல்வதில் வியப்பில்லை. ஆனால் இலக்குவன் நேரிடையாக இவ்வாறு அண்ணனிடம் சொல்வது முறையா? என்ற வினாத் தோன்றினால் இரண்டு காரணங்களினால் இதைச் சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். மிகத் தேவையான இந்த இடத்தில், அதிர்ச்சி மருத்துவம் தேவைப்படுகிறது. இரண்டாவது, பிரபோத சந்திரோதயம் என்ற வேதாந்த நாடக நூல் கூறுவதை அடியொற்றியதாகும் இது என்பதும் கருதத்தக்கது. நிர்குண பிரம்மம்கூட நிர்குணமாக இருக்கின்ற வரையில் அதற்கு எவ்விதக் குணமும் இல்லை. அதே பிரம்மம் சகுணமாக இந்த உலகிடை வந்தால் உலகில் வாழும் ஏனைய உயிர்களுக் குரிய குணங்கள் அதனிடம் இருந்தே தீரும். இந்த அடிப்படை யில் பார்த்தால் மூலப்பரம்பொருள் பாற்கடல் பள்ளி நீங்கி உலகிடை மானுடனாக வந்தால், மானுடனுக்குரிய குணங்களைப் பெற்றே தீரும். அப்படியானால் சராசரி மனிதனுக்கும், இராமனுக்கும் என்ன வேற்றுமை என்ற வினா தோன்றும். சாதாரண மனிதர்களுக்கு இந்த குணங்கள் உடம்பின் உறுப்புகளைப் போல் பற்றிக்கொண்டு விடாமல் இருக்கும். சகுணமாக உலகிடைத் தோன்றிய இராமனுக்கு இக்குணங்கள் உடம்பின்மேல் அணியப்படும் உடுப்புப்போல் இருக்கும். மேல் அங்கியைக் கழற்றினால் உடம்பு தெரிவது போல இராமனை மறைத்திருக்கும் இந்தப் பெரிய அவலம் அங்கியைப் போன்றதே ஆகும். நான் பிறந்து பயன் என்ன? என்று இராமன் கேட்கும்பொழுது அங்கியின் (குணம்) வசப்பட்டு பேசுகிறான். இலக்குவன் செய்த மருத்துவம் என்னவென்றால், ஒரு வினாடி நேரம் இந்த அங்கியைக் கிழித்து அவன் யார் என்பதை நினைவூட்டியதே ஆகும். ஏனைய இடங்களில் இந்த மாபெரும் உண்மையை வெளியே சொல்லவேண்டிய தேவை இலக்குவனுக்கு ஏற்படவில்லை
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/217
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை