200 38 இராமன் - பன்முக நோக்கில் கம்பனுடைய காப்பிய அமைப்பில் தான் யார் என்பதை இராமன் அறிந்து வெளிப்பட்டதாகவே எங்கும் காட்ட வில்லை. அப்படி இருந்தும் இரண்டொரு இடங்கள் இக் கருத்துக்கு அரண் செய்வதாக அமையவில்லை. கரனுடன் செய்த போரில் இராமன் பிடித்த வில் முறியவே தன் இடக்கையைப் பின்புறமாக நீட்டினான். வருணன் வில்லைக் கொண்டு வந்து கொடுத்தான் என்று பாடுகிறான் கம்பன். அப்படியானால் தான் யார் என்ற உள்ளுணர்வு இருந்ததால் தானே தனக்குப் பின் வில்லை வைத்துக்கொண்டு வருணன் காத்திருக்கிறான் என்ற நினைவு வந்து கையை நீட்டினான். இதுபோன்ற இடங்கள் காப்பிய பாத்திரப் படைப்பில் சற்று நெருடலான இடங்கள்தான். புதியவர்களை ஏற்பதில் இலக்குவன் தயக்கம் கிஷ்கிந்தா காண்டம் அனுமப் படலத்தில் ஒரு மாறுபாடான காட்சி. தூரத்தே மறைந்து நின்று, இராமனும் இலக்குவனும் நடந்து வருவதைக் கண்ட தேவரோ, மூவரோ என்று ஐயமுற்ற நிலையில் மாணிவடிவம் கொண்டு அனுமன் இவர்கள் எதிரே வருகிறான். இராமனைக் கண்டார் பலர்; அவனுடைய தாளையும் தோளையும் கண்டு அனைவரும் அதிலேயே லயித்து நின்று விட்டனர். அனுமன் ஒருவன்தான் தாளையும் தோளையும் நோக்காமல் இராமன் கண்களைக் கண்டு பேசத் தொடங்குகிறான். கண்களை வைத்தே இராமனை ஒரளவு அறிந்து கொள்கிறான் அனுமன். பிரம்மச்சாரி வடிவில் இருக்கும் அனுமன் கண்களைக் கொண்டே அவனை அளந்துவிடுகிறான், இராகவன். ஒருவரை ஒருவர் கண்களின் மூலம் எடையிடும் இந்த மெளன நாடகம் நடைபெறுகையில் இளைய பெருமாள் ஏனோ அதில் பங்கு கொள்ளவேயில்லை. அவன் பங்குகொள்ளாததைக் கவனித்த தசரத குமாரன் முதலில் அனுமனைப் பலபடியாகப் புகழ்ந்து கூறிவிட்டு யார்கொல் இச் சொல்லின் செல்வன்' என்று வினாவுகிறான். சில சொற்களில் தன் வரலாற்றைக் கூறிய அனுமனைப் பார்த்து இவன் கல்லாத கலைகளே உலகத்தில்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/218
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை