4 38 இராமன் - பன்முக நோக்கில் சாதகக் கதைகளில் வரும் இந்த இராமகாதையில் அயோத்தி, இராவணன், குரங்குச் சேனை, அனுமன், சுக்கிரீவன், அரக்கர் சேனை, இந்திரசித்து, இலங்கை, தென்னாடு முதலிய எந்தக் குறிப்பும் இல்லை. சீதையை இராவணன் கவர்ந்த செய்தியும் இல்லை. இத்தகைய ஒரு கதை இன்று நாட்டில் வழங்கும் எந்த இராமாயணத்திலும் இடம் பெறவில்லை. ஆனாலும் தசரதன், இராமன், சீதை ஆகியோர் இதில் காணப்படுதலும், வரத்தின் மூலம் பரதனுக்குப் பட்டம் வாங்கியதும் காணப்படுதலின் ஒரளவு இராமகாதையோடு தொடர்புடையது என்றே கொள்ள வேண்டியுள்ளது. இக்கதை அல்லாமல் இக் கதையினின்று ஒரளவு மாறுபட்டுச் செல்லும் கதைகள் இத்தொகுப்பினுள் இன்னும் இரண்டு உள்ளன. எது முந்தியது? ஒரு காலத்தில் இக்கதை முந்தியதா அன்றி வான்மீகி சொன்ன கதை முந்தியதா என்ற விவாதம் மிகக் கடுமையாக இந்நாட்டிலும் மேனாட்டிலும் எழுந்ததுண்டு. இந்திய இலக்கிய வரலாறு என்ற ஆங்கில நூலில் அதன் ஆசிரியர் வின்ட்டர் நிட்ஸ் (M.Winternitz)இதற்கொரு முடிவு கூறுகிறார். செவிவழிச் செய்தியாக வந்த நாடோடிப் பாடல்களே, சாதகக் கதைகளுக்கும் வான்மீகிக்கும் மூலமாக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வருகிறார்." சமண இராமாயணங்கள் புத்த சாதகக் கதைகள் தவிர விமலசூரி என்பவரும், குணபத்திரர் என்பவரும் இரண்டு இராமாயணங்கள் எழுதி யுள்ளனர். இவர்கள் இருவருள் விமலசூரி என்பவர் சுவேதாம்பரப் பிரிவைச் சேர்ந்த சமணர்; குணபத்திரர் திகம்பரப் பிரிவைச் சேர்ந்த சமணர். இவர்கள் இருவரும் "The Rise of the Religious significance of Rama by Frank Whaling - Page - 95 (Motilala Bana"sidass, Delhi - 1980),
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/22
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை