202 38 இராமன் - பன்முக நோக்கில் எடுக்கக்கூடியவர்கள். ஆதலால், சீதையைக் கவர்ந்து சென்ற அரக்கர்கள் இவ் வடிவில் வந்து ஊறுசெய்யக்கூடுமோ என்ற எண்ணத்தில் இலக்குவன் இருந்ததில் தவறு ஒன்றுமில்லை. மாயமானைப் பொறுத்தவரையிலாவது அண்ணன் தன்னோடு அதுபற்றி உரையாடினான்; தன் கருத்தைச் சொல்லச் சந்தர்ப்பம் கிடைத்தது. இப்பொழுது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. எதிரே நிற்பவன் இருவருக்கும் புதியவன்தான். கொண்டிருக்கிற வடிவம் பிரம்மசாரி வடிவம். எதை வைத்து இவனை நண்பன் என்று நம்புவது? நீ யார் என்று இராகவன் வினவியதற்கு அனுமன் கூறிய விடை வருமாறு:- - "மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம் நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் * தேம்பாக் கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்." - கம்ப. 3765 இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பரிதிச் செல்வன் செம்மலுக்கு ஏவல் செய்வேன். தேவ நும் வரவு நோக்கி விம்மல் உற்று அணையான் ஏவ, வினவிய வந்தேன் எனறானஎம்மலைக் குலமும் தாழ, இசைசுமந்து, எழுந்த தோளான். - கம்ப. 3766 இந்த விடையைக் கூறுவதற்குச் சிறந்த கல்வியோ, ஞானமோ, அனுபவமோ எதுவும் தேவையில்லை. ஒரு சராசரி மனிதன் கூறக்கூடிய விடையைத்தானே அனுமன் கூறினான்? அப்படி இருக்க, அண்ணன் ஒகோ வென்று புகழ்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? இதனால்தான் இலக்குவன் அசட்டையாக இருந்துவிட்டான். இவ்வாறு இருந்ததனால் அவனுடைய
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/220
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை