தம்பியரும் இராமனும் ே 207 அண்ணனிடம் பக்தி பூண்டவர்கள் தன்னைப் போலவே உடனிருந்து சுக துக்கங்களில் பங்கு கொள்வதுதான் சிறந்த வழி என்ற நினைவு வந்தவுடனேயே மனத்தின் அடித்தளத்தில் பரதன், சத்துருக்கனன் ஆகிய இருவரும் இந்த அளவு தொண்டு செய்யவில்லையே என்ற ஒப்பாய்வு இலக்குவன் அடிமனத்தில் தோன்றியதற்கு விடையாக இராமனுடைய பதில் அமைகின்றது. உடனிருந்து தொண்டு செய்யும் தன்னைவிடப் பரதனுடைய இராமபக்தி குறைந்துதான் இருக்கவேண்டும் என்ற இலக்குவனுடைய எண்ணத்திற்கு விடைகூறுவதுதான் பின்னிரண்டு அடிகளின் குறிப்பு. பின் பிறந்த நீங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் சமம் என்று நினைந்துவிடாதே; பரதன் உங்களைவிடப் பல மடங்கு உயர்ந்த உத்தமன் என்று கூறும்பொழுது இராமன் என்ற மாமனிதன் அன்பே வடிவான இலக்குவன் மனத்தின் ஆழத்தில் முளைவிடும் அகங்காரத்தை இச் சொற்களின் மூலம் களைந்துவிடுகிறான். நாகபாசம் காட்டும் பாசப் பிணைப்பு யுத்த காண்டத்தில் வரும் நாகபாசப் படலம் இராம - இலக்குவர் உறவுக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். நெடும் போர் செய்து இலக்குவனை ஒன்றும் செய்ய முடியாது என்று கண்ட இந்திரசித்து, விண்ணில் மறைந்து நின்று நாகபாசத்தை ஏவினான். வீடணன் தவிர இலக்குவன் உள்ளிட்ட அனைவரையும் பாம்பு உடம்பைச் சுற்றியது போல் ஒவ்வொருவர் உடலையும் அப்பாசம் பிணித்து விட்டது. மூச்சு உண்டோ இல்லையோ என்று கருதுகின்ற அளவுக்கு அப்பாசம் அவர்களை இறுக்கிவிட்டதால் வீடணனே அழுது புலம்பத் தொடங்கிவிட்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் இராமன் இல்லை. போர்க்களத்தில் எங்கோ ஒரு மூலையில் அவன் வழிபாடு செய்து கொண்டிருக்கிறான். எனவே, இங்கு நடந்தது ஒன்றும் இராமனுக்குத் தெரியாது. வீடணனை ஒரளவு தேற்றிய அனலன், இராகவனிடம்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/225
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை