208 38 இராமன் - பன்முக நோக்கில் சென்று நடந்ததைக் கூற, ஆயிரம் பெயரினானும் அருந்துயர்க் கடலுள் ஆழ்ந்தான்” (821) என்கிறான் கவிஞன். இதற்குள் பொழுது சாயவே, எங்கும் இருள் பரவிற்று. அனலன் கூறிய வாசகத்தைக் கேட்ட இராகவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை: கண்ணின், நீரைக் கரைத்திலன், கண்கள் திறந்திருப்பினும் ஒன்றையும் காணவில்லை, உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி, ஏங்கி. (8216) சிறிது நேரத்திற்கெல்லாம் அக்கினியாஸ்திரத்தை ஏவி ஒளி உண்டாக்கிக் கொண்டு போர்க்களம் சென்று தம்பியைக் காணுகிறான் தமையன். இறந்தது போன்று கிடக்கும், நாகங்களால் கட்டப்பட்டுக் கிடக்கும் அந்த உடலைப் புரட்டிப் புரட்டி பார்க்கிறான். மூச்சு உளதோ என்று மூக்கிடை விரலை வைத்துச் சோதிக்கிறான். தம்பியின் உடல்மேல் விழுந்து பலமுறை அதனைத் தழுவிக் கொண்டு அழுகின்றான். 'உழைக்கும், வெய்து உயிர்க்கும், ஆவி உருகும்; "இலக்குவா! இலக்குவா! என்று அழைக்கும். இராமன் என்ற பிறப்பெடுத்தும் ஜனன, மரணப்பிடியில் இருந்து விடுபட்டவனாகிய இராகவன், இலக்குவா! பிழைத்துக் கொள்வாயோ நீ என்றான். “தாமரைக் கையால் தாளைத்தைவரும்; குறங்கைத்தட்டும்; தூமலர்க் கண்ணை நோக்கும்; மார்பிடைத் துடிப்பு
- - உண்டு என்னா, ஏமுறும், விசும்பை நோக்கும் எடுக்கும்; தன்மார்பின்
ஏற்றும்; பூமியில் வளர்த்தும்; "கள்வன்போய் அகன்றானோ? - என்னும்." - கம்ப. 8224 இராமனைப் பொறுத்தவரை தம்பி உயிருடன்தான் இருக்கிறான் என்ற எண்ணமே தேயத் தொடங்கிவிட்டது. தன் கைகளால் இலக்குவன் கால்களைத் தடவிக்