பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் 38 209 கொடுப்பதும், அவன் தொடைகளைத் தட்டிக் கொடுப்பதும் முதலிய செய்கைகளில் ஈடுபட்டவனாய்த் தன்னை மறந்த நிலையில் நீண்டநேரம் இருக்கின்றான். இந்த மனநிலையில் கையிலிருந்த வில் நினைவுக்கு வருகிறது. நாண் ஏற்றப்பட்ட அந்த வில் "என் பணி யாது? என்று கேட்பது போல அவன் மனத்தில் ஒரு பிரமை உண்டாகிறது. இதன் முடிவாக "இந்த உலகத்தையெல்லாம் அழிப்பேன்' என்று கூறி, உதடுகளைக் கடித்துக் கொள்ளுகிறான். இந்தத்துயரப் பெருங்கடலில் ஆழ்ந்திருக்கும் இராகவன், இனி யாரும் தனக்குத் துணையே இல்லை என்ற எண்ணத்தில், என்போல் யார் இது பட்டார் என்று நொந்து கூறுகிறான். தம்பியை இழந்து விட்டதாகவே கருதித்துயரில் மூழ்கும் இராகவன் அத்துயரக் கடலில் எவ்வளவு ஆழம் சென்றுவிட்டான் என்பதைத் தெரிவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இராமனைப் பொறுத்தவரை அடைக்கலப் பொருள் என்பது போற்றி, மதித்து, உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்ற வேண்டிய ஒன்று என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பவன். தம்பி கிடந்த கோலத்தைக் கண்டவுடன், தான் அந்த இடத்தில் இல்லாமல் தம்பியை விட்டுப் போய்விட்டோமே என்று வருந்துகிறான். போர்க்களத்தில் அனைவரும் ஒர் இடத்தில் இருப்பது என்பது இயலாத காரியம். அவரவர் பணிக்கு ஏற்ப வெவ்வேறு இடங்களில் இருப்பதுதான் முறைமை ஆகும். அதை நன்கு அறிந்திருந்தும் இராகவன்துயர மிகுதியால் திடீரென்று வீடணன் மேல் பெரிய குற்றத்தைச் சாட்டுகிறான். 'இராவணன் மைந்தனுடன் இலக்குவன் போர் புரிகின்றான் என்று என்னிடம் வந்து சொல்லாதது உன்னுடைய பெரிய தவறாகும். அதனால், என்னைக் கெடுத்தனை: வீடணா! நீ என்று கூறும் முறையில், . அ-14