210 38 இராமன் - பன்முக நோக்கில் "எடுத்தபோர், இலங்கை வேந்தன் மைந்தனோடு இளையகோவுக்கு அடுத்தது" என்று, என்னை வல்லை அழைத்திலை, அரவின்பாசம் தொடுத்த கை தலையினோடும் துணிந்து, உயிர்குடிக்க; &T6örð60s கெடுத்தனை விடனா! நீ என்றனன் - கேடு இலாதான்". - கம்ப 8227 இராகவன் பேசுவது நமக்கே வியப்பைத் தருகிறது என்றால், இராமன் வாயல் நீ என்னைக் கெடுத்தனை என்று சுட்டப்பட்டவனாகிய வீடணன் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. எத்தகைய எளிய மக்களிடத்தும் மறந்தும் கடுஞ்சொல் பேசாதவனாகிய இராகவன் விதி வலியைப் பெரிதும் நம்பி இலக்குவனுக்கு உபதேசம் செய்தவனாகிய இராகவன் தன் அன்புக்கு உறைவிடமான இலக்குவன் இறந்தான் என்று நினைத்துத் தன்னை மறந்த நிலையில் சாட்டிய குற்றச்சாட்டாகும் இது. இராகவனா இவ்வாறு பேசினான் என்று வியக்கும் வேளையில் ஒன்றை நினைவுக்குக் கொண்டு வரவேண்டும். இதே இலக்குவன் இராமன் யார் என்பதை அவன் முகத்துக்கெதிரேயே பேசியுள்ளான். அப்படிப்பட்ட ஒருவன் தன் பூரண ஆசியையும் பெற்ற இலக்குவன் இறக்கமாட்டான் என்பதனை அறியாதவனா? அதை அறிந்தவன் மூல இராமனே ஆவான். தசரத இராமனைப் பொறுத்தமட்டில் அறத்தின் மூர்த்தியாய், அருளுடை ஒருவனாய் ப் போர்க்களத்தில் இறங்கியவன், அறத்தை அன்றி மறம் என்ற சொல்லையே அறியாதவனும் தங்களுள் மிக முக்கியமானவனுமான இலக்குவனுக்கே இக்கதி என்றால், தசரதராமன் அறத்தையே சந்தேகிக்கத் தொடங்கிவிட்டான். மீண்டும் ஒன்றை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். இந்தப் பாடுபடுபவன் தசரத ராமனே.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/228
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை