பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ேே 2甘 போர் என்று வந்தால் ஒரு திறத்தார் தோற்பதும், மறு திறத்தார் வெல்வதும் இயற்கை, அப்படியிருக்க இப்போரில் இருதிறத்தாரும் மிகுந்த வன்மை படைத்தவர்களாக இருக்க, தன் திறத்தில் எப்படி இது நிகழ்ந்தது என்று நினைக்கிறான் இராமன். எல்லா வளங்களையும், வரபலங்களையும் பெற்ற இராவணனிடம் அறம் என்ற ஒன்று தவிர எஞ்சிய அனைத்தும் உள்ளன. இராகவன் கட்சியில் மிகுபலம் என்பதோ, பெருந்துணை என்பதோ எதுவும் இல்லாமல் இருக்கும் நிலையில் அறம் ஒன்றை நம்பித்தானே போரில் இறங்கினான், அறத்தின் ஆழியான் அறத்தை நம்பிய தனக்கு இக்கதி வந்ததென்றால் பெரும் ஏமாற்றத்தையும் சினத்தையும் அது உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால்தான் வீடணனைக் கோபிக்கின்றான். இலக்குவனோடு இருந்தவர்கள் சுக்கிரீவன், அனலன், அனுமன், வீடணன் என்போர் ஆவர். அப்படி இருக்க, இலங்கை வேந்தன் மகனுடன் இளைய கோ போர் செய்கின்றான் என்ற செய்தியைத் தன்னிடம் வந்து சொல்லவில்லை என்று வீடணனை மட்டும் ஏன் கோபிக்க வேண்டும்? சுக்கிரீவன், அனுமன், அனலன் ஆகியவர்களில் ஒருவரைக் கோபித்திருக்கலாமே என்றால், அதற்கும் தக்க காரணம் உண்டு. இலங்கை வேந்தன் மகன் ஆற்றல் எத்தகையது, அவனிடம் உள்ள தெய்வப் படைகள் யாவை என்ற விவரங்களோடு மாயப்போரில் அவன் வல்லவன் என்ற உண்மையும் வீடணனைத் தவிர ஏனையோருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்பதால்தான் அவர்களை விட்டுவிட்டு என்னைக் கெடுத்தனை வீடணா என்று உணர்ச்சி வசப்பட்டு இராகவன் வீடணனிடம் கூறிவிட்டான். செய்யாமற் செய்த உதவி கதைத் தொடர்ச்சி இருப்பதால், நாகபாசம் நீங்க உதவிய கருடன் செய்தியையும் - மற்றொன்று விரித்தலாக அல்லாமல் இடைப்பிறவரலாக - ஒரளவு காண்போம்.