212 38 இராமன் - பன்முக நோக்கில் தசரதகுமாரன் இராமானுஜனாகிய தம்பிமேல் கொண்ட காதல் எத்தகையது என்பதை அறிவிக்க இப்பகுதி மிகவும் பயன்படும். தாகபாசத்தில் கட்டுண்டவர்கள் இடர்தீர்க்க மேலுலகத்தில் இருந்து கருடன் வருகின்றான். அவன் நிழல்பட்டதும் நாகபாச பந்தங்கள் இற்று விழுகின்றன. அதில் கட்டுண்ட அனைவரும் எழுந்து ஆரவாரம் செய்தனர். மகிழ்ந்த இராகவன் கருடன் யார் என்று தெரியாமல் அருகில் அழைத்து அவனுக்கு நன்றி பாராட்டுகின்றான். "ஐயனே! நீ யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் முன்னர்ச் செய்த தவத்தின் பயனாக எங்கள் அனைவரையும் உயிர்ப்பித்தாய். எங்கள் நன்றிக்கு அடையாளமாக உனக்கு ஏதாவது கையுறை தரவேண்டும் என்று விரும்பினாலும் அதனை ஏற்பவனாக நீ காணப்படவில்லை. (8268) 'நீ முன்னர் எங்களைக் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. நாங்களும் அவ்வாறே. அப்படி இருக்க ஒரு பேருபகாரம் செய்து எங்களைக் கடனாளி யாக்கிவிட்டாய். உடலுள் இருக்கின்றதோ இல்லையோ என்று. ஐயப்படும் அளவிற்கு வந்துவிட்ட எங்கள் உயினரை நீ இப்பொழுது தந்தாய். ஐயா! ஒருவேளை முன்னரே நாம் நண்பர்களாக இருந்திருப்பின் இவ்வுதவி முறையான தாகும். அதுவும் இல்லாதபோது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தயவு செய்து சொல்லு' என்கிறான் இராகவன். 8270 தன்னை இன்னார் என்று <$# 68) – tí í fr 6 T tih கண்டுகொள்ளாத தன் தலைவனாகிய பரம்பொருள், இப்பொழுது எப்படி நன்றி சொல்வது என்று கேட்கிறான். மனம் நெகிழ்ந்து விட்டான், கருடன். உண்மையைச் சொல்வதிலும் பயனில்லை. எனவே, மிக அழகாகவும், சாதுர்யமாகவும் விடை கூறுகின்றான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/230
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை