214 38 இராமன் - பன்முக நோக்கில் அறிந்தகொள்ளாவகையில் விண்ணில் மறைந்து நின்று ஏவிவிட்டான். பிரம்மாத்திரம் ஏவப்பட்ட நிலை பரிதாபமானது. இந்திரசித்தனை நீண்ட நேரம் காணாமையால் அவன் களத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பிவிட்டான் என்று நினைத்த இலக்குவன், சுக்கிரீவன், அங்கதன் முதலியோர் தம் கவசம் முதலியவற்றைக் களைந்து ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். அந்த நிலையில் ரகசியமாக ஏவப்பட்ட பிரம்மாத்திரம் பதினாயிரக்கணக்கான அம்புகளாக மாறி, இவர்கள் அனைவரின் உடல்களையும் சல்லடைக் கண்களாக துளைத்துவிட்டது. வேறு ஒரு பகுதியில் இருந்த இராகவன் தெய்வப்படைகளுக்குத் தான் செய்ய வேண்டிய வழிபாடுகளை முடித்துக்கொண்டு இவர்களைத் தேடிக்கொண்டு வந்தபொழுது அனைவரும் குற்றுயிரும் கொலையுயிருமாக இருந்த கொடுங்காட்சியைக் கண்டான். சுக்கிரீவன், அங்கதன் ஆகியோரைப் பார்த்த பின்னர்த் தன் ஆறாத்துயரத்தைப் பல பாடல்களில் பேசுகிறான். இறுதியாக இலக்குவனைப் பார்த்தவுடன் துயரத்தின் எல்லைக்குச் சென்று தன் வாழ்வையே வெறுத்தவனாக ஏறத்தாா பதினாறு பாடல்களில் (8645-8660) தன் துயரத்தை வெளிப்படுத்துகிறான். "தாயோ நீயே, தந்தையும் நீயே தவம் நீயே, சேயோ நீயே, தம்பியும் நீயே, திரு நீயே, போயோ நின்றாய்; என்னை இகந்தாய் புகழ்பாராய், நீயோ யானோ, நின்னினும் நெஞ்சம் வலியேனோ?" - கம்ப 8646 எந்த அளவிற்கு இராகவன் இலக்குவனை நேசித்தான், எந்த அளவிற்கு நம்பி இருந்தான் என்பதை மேற்கண்ட பாடல் விளக்குவதைக் காணலாம். - "இளையவனே! பதினான்கு ஆண்டுகள் எனக்கு உணவு தேடித்தந்த உன்னைப் பொறுத்தவரை உண்பதையே மறந்துவிட்டாய். எங்களைக் காப்பதற்கென்றே பகலெல்லாம்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/234
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை