தம்பியரும் இராமனும் ே 215 வெயிலில் நின்று இரவெல்லாம் உறங்காமல் இருந்தமையின் இப்பொழுது களைத்து உறங்குகிறாய் போலும். ஐயனே! உடனே எழுந்து வருவாயாக" (8648) "நீ இறந்தால் நானும் இறப்பேன். நாம் இருவரும் இறந்தால் பரதனும் உறவினர்களும் மாள்வது திண்ணம்" (8652) முன்னர் இலக்குவன் செய்த உதவிகளை வரிசைப்படுத்தி நினைந்த இராமன் திடீரென்று தன்னிரக்கம் கொள்ளத் தொடங்கி விட்டான். இலக்குவன் பிரிவு அவனை எவ்வளவு தூரம் உலுக்கி விட்டது என்பதற்கு, அன்பு மனைவியாகிய பிராட்டியை விடம் என்று பேசுகின்ற அளவிற்கு அவனைக் கொண்டு சென்று விட்டது. அவளால்தானே, இந்நிலை தனக்கேற்பட்டது என்று நினைந்தமையால் இலக்குவன் பிரிவுத் துயரத்தைவிட அதிகமாகத் தன்னிரக்கம் மேலிட்டு அதன் விளைவாக, "வேள்விக்கு ஏகி, வில்லும் இறுத்து, ஒர் விடம் அம்மா வாழ்விக்கும்!" என்று எண்ணினென்,........ - கம்ப 8650 என்று கூறி அழும் நிலைக்கு அவனைக் கொண்டு சென்றது. இதே தன்னிரக்கம் பின்வருமாறு அவனைப் பேசச் செய்கிறது: "இளவலே! என் வலிமையும் அம்பும் வாலி, விராதன், கவந்தன், கரன், கடலரசனான வருணன், ஏழு மராமரங்கள் ஆகியோருக்கு மட்டும் பயன்பட்டு இன்று பயனற்றுப் போயிற்றே" (8655) இராகவன் இங்ங்னம் அழுது புலம் புகையில் சாம்பனுடைய அறவுரையைக் கொண்டு அனுமன் மருத்துமலையைக் கொணர எதிர்பாராத விதமாக அனைவரும் உயிர்பெற்று எழுந்தனர். இரண்டாம் முறையாக இராகவன் நன்றி பாராட்டும் பணியை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. கருடன் முன்பின் அறியாதவனாக ஒரே ஒரு முறை வந்து நாகபாசத்தின்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/235
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை