216 38 இராமன் - பன்முக நோக்கில் இடர்தீர்த்தான். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்! என்று பலமுறை இராகவன் வேண்டியும், போர் முடிந்தபின் உன்னை வந்து காணுகிறேன்' என்றுகூறிப் போய்விட்டான் கருடன். இப்பொழுது இரண்டாம் முறையாகப் பிரமாத்திரத்தால் உயிரனைய தம்பியும் அடைக்கலம் பெற்ற சுக்கிரீவன், அங்கதன் ஆகிய அனைவரும் சேர்ந்து அழியும் தறுவாயில் இருந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் உயிர் தந்தான் தொண்டின் முழுவடிவாய் நிற்கும் அனுமன். அவன் செய்த உதவியை நினைத்துப் பார்க்கிறான் இராகவன். மருத்துமலை வாராவிட்டால் இலக்குவன், சுக்கிரீவன், அங்கதன் ஆகியோர் மாள்வது உறுதி. இம் மூவரும் போன பிறகு இராமன் அவர்களைத் தொடர்வது உறுதி. இவர்கட்கு நேர்ந்த கதியைப் பின்னர் அறிந்தால் பரதனும் இதையே செய்யப் போகிறான். தாயரும் இத்துறையில் பின்னடைய மாட்டார்கள். எனவே, அனுமன் செய்த உதவி இலக்குவனுக்கும் இராமனுக்கும் மட்டும் அல்லாமல் இரகுகுலம் முழுவதற்கும் செய்த உதவி ஆகும் என்ற உண்மையை அறிந்துகொண்ட இராமன் அனுமனுக்கு நன்றி கூற விரும்புகிறான். எப்படிக் கூறுவது? வேண்டும் வரங்கள் தரலாம். ஆனால், வேண்டாமையன்ன விழுச்செல்வம் நிறைந்த அனுமன் எதையும் விரும்பப் போவதில்லை. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு தசரதகுமாரன் தனக்கே உரிய முறையில் அனுமனைப் பார்த்துக் கசிவு நிறைந்த பாசத்தோடு பேசுகிறான். இந்த வினாடி வரை அனுமன் சிறந்த பக்தனாகவும் தன்னலமற்ற தொண்டின் உறைவிடமாகவும் தான் இருந்தான். இப்பொழுது இராமனுடைய கண்களில் அனுமன் பக்தன் என்ற நிலை மாறி, தொண்டன் என்ற நிலை மாறி, இரகு வம்சம் முழுவதையும் காத்த தந்தையாகக் காட்சி அளிக்கிறான். "ஐயனே! பிள்ளைப் பேற்றிற்காக வரங்கிடந்த தசரதமன்னனுக்கு மக்களாக நால்வர் தோன்றினோம். இந்தப் பிரம்மாத்திரம் காரணமாக நால்வரும் மடிந்தே விட்டோம். இப்பொழுது உன்முன் நிற்கும் நாங்கள் இருவரும் அயோத்தியில் இருக்கும் இருவரும் உனக்குப்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/236
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை