பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2í8 38 இராமன் - பன்முக நோக்கில் நின்னின் தோன்றினோம் என்பதற்குப் பொருளாக அமைந்தது. இதன் பின் இலக்குவன் அடுத்தபடியாக இராம - இலக்குவர் உரையாடலை மீட்சிப்படலத்தில்தான் காண்கிறோம். 'சுக்கிரீவன், அனுமன், ஏனைய வானர வீரர்களை உடன் அழைத்துச் சென்று நீதிமானாகிய வீடணனுக்கு முடிசூட்டி வருக! என்று வள்ளல் ஆணை இட்டதும் அதனைச் செய்துமுடித்து வருகிறான் இலக்குவன். அடுத்து, பிராட்டி தீப்புக முடிவு செய்தபொழுது இலக்குவன் அதிலொரு பணியைச் செய்ய நேரிடுகிறது. அதுபற்றிய விளக்கத்தை சீதையும் இராமனும் என்று தலைப்பில் காணலாம். - முடிவாக உடன்பிறந்த தம்பியரிடம் இராமன் கொண்ட தொடர்பில் அன்பின் ஆழத்தைக் கம்பன் புலப்படுத்தியதைக் கண்டோம். வள்ளலாகிய இராமனையே அனைய பரதன் கானகத்துக்கு உடன் வரவே முனைந்தான். ஆனால், இராமன் கட்டளையால் நந்தயம்பதியில் தங்கிப் பாதுகையாட்சி நடத்தினான். இலக்குவன் உறங்காவில்லியாய் உடனுறைந்து 'தம்பியுடையான் படையஞ்சான்' என்னும் வாக்கிற்கு இலக்கியமானான். சுமித்திரை பெற்ற சத்துருக்கனன் தன் தாய் போலவே தன்னைக் கரைத்துக்கொண்டு நிழலாய் வாழ்ந்தான். தம்பியர் மூவருமே தியாக வடிவங்களாகத் திகழ்ந்தனர். அவர்களுக்கு ஏற்ற தமையனாகத் தன் துணைத் தம்பி தன்மேல் துணைவர்மேல் தாழ்ந்த அன்பனாக (8243) இராமன் அமைந்தான். மற்றொன்று விரித்தலாக அல்லாமல் தொடர்புடைய செய்திகள் சில இடைப்பிற வரலாகக் குறிக்கப்பட்டிருந்தாலும், இந்த இயல் உடன்பிறந்த தம்பியர் இராமன்பாலும், இராமன் அவர்கள்பாலும் கொண்ட பிணைப்பையும் பாசத்தையும் புலப்படுத்தி அமைந்துள்ளது. .