உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 219 7. உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் குகனும் இராமனும் நாவாய் வேட்டுவன் சிற்றன்னையின் ஏவலால் மனைவி, தம்பி ஆகிய இருவருடன் கங்கைக் கரை அடைந்த இராகவன், வடகரையில் தங்கியிருக்கும் பொழுது வழக்கம்போல் இலக்குவன் காவற்பணியை மேற்கொண்டு நிற்கிறான். பனைமரம் போன்ற உடலமைப்பும், அன்பு முகமும் கொண்ட ஒருவன், கையில் ஒரு கலயத்துடன் இலக்குவன் எதிரே வந்து நிற்கவும் அவனை யாரென்று உசாவுகிறான் இலக்குவன். "நாவாய் வேட்டுவன் நாயடியேன்” என்று குகன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். என்ன வியப்பு! இந்த ஒரு வாக்கிய அறிமுகத்தைக் கேட்டுக்கொண்டு உள்ளே சென்ற இலக்குவன் அண்ணனிடம் குகன் வந்திருப்பதை அறிவிக்கின்றான். எவ்வாறு நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச் சுற்றமும் . தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்; எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன் ஒருவன் என்றான். (1964) துரயவன், தாயினும் நல்லான் குகன் பேசிய தன் அறிமுக வார்த்தைகள் சிலவற்றை மட்டும் கேட்ட இளையவன், அண்ணனிடம் பேசும்பொழுது தூயவன்' என்றும், தாயின் நல்லான்’ என்றும் குகனைப் பற்றிக் கூற என்ன ஆதாரம்? இலக்குவனுக்கும் இராமனுக்கும்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/239
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை