6 ேே. இராமன் - பன்முக நோக்கில் விமலசூரி, இரவிசேனர், குணபத்திரர் என்பவர்கள் எழுதிய ஜைன இராமாயணங்கள் வான்மீகிக்கு மிகவும் பிற்பட்டவையாகும். ஆனால், 9ஆம் நூற்றாண்டில் தோன்றிய கம்பனுக்கு, விமலசூரியின் பெளம சரிதமும் இரவிசேனரின் பத்ம புராணமும் முற்பட்டவை ஆகும். இவற்றை அடுத்து ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட இராமாயணங்கள் வடமொழியிலும், பிற இந்திய மொழிகளிலும் தோன்றலாயின. இராமாயணம் என்ற பெயரிலில்லாமல் கி.பி.4ஆம் நூற்றாண்டில் ரகுவம்சம் என்ற பெயரில் காளிதாசன் இயற்றிய நூலும் இத் தொகுப்பைச் சேர்ந்ததே ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை பழைய இராம காதையை ஒரளவு விரித்துக் கூறும் மற்றொரு நூல் வியாச பாரதமாகும். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட பருவங்களில் இராமகாதை பேசப்படுகிறது. இந்நாட்டிற்கு அப்பால் கீழ்த்திசையில் உள்ள இலாவோசிய, கம்போடிய, மலேசிய, சிங்கள, சயாமிய ஆகிய நாடுகளிலும் இராமாயணம் பரவியிருந்தது. இவை அனைத்தும் ஒரளவு வான்மீகியைத் தழுவியும், ஒரளவு புத்தசாதகக் கதைகளைத் தழுவியும் வடிவு பெற்றன. இந்தப் பல்வேறு இராமாயணங்களின் கதைப்போக்கு ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகவும், முரண் பட்டதாகவும் கூட அமைந்துள்ளன. எத்தகைய முரண்பாடும், மாறுபாடும் இருந்தாலும் காப்பிய நாயகனான இராமனைச் சித்தரிப்பதில் முரண்பாடு எதுவும் இல்லை. இது ஒரு வியக்கத்தகுந்த நிலைதான். கதைப் போக்கிலும், கதை மாந்தர் வாழ்விலும் பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டு விளங்கினாலும், காப்பிய நாயகனைப் பொறுத்தவரை முரண்பாடு அல்லது மாறுபாடு என்று பெரிதாகச் சொல்லத் தக்கது எதுவுமில்லை. இராமனைச் சாதாரண மனிதனாகச் சித்தரிக்கும் சாதகக் கதைகள் தொடக்கத்தில் தோன்றியவை எனலாம். அடுத்துத் தோன்றிய வான்மீகத்தில் இதே இராமன் பண்பாட்டின் உறைவிடமாகிறான். யுத்த காண்டத்தில் அவதாரம் என்றும் கருதப்படுகிறான். அத்யாத்ம இராமாயணத்தில் பரப்பிரம்ம சொரூபம் என்றே வருணிக்கப்படுகிறான். இவற்றுள் எந்த
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/24
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை