220 38 இராமன் - பன்முக நோக்கில் வேறுபாடு தெரியாமல் நின் கழல் சேவிக்க வந்தனென், நாவாய் வேட்டுவன்; நாயடியேன் (1963) என்று கூறியதால் 'உள்ளம் தூயவன்' என்ற முடிவுக்கு வந்தான். அரச குமாரர்க்குப் பசி எடுத்தால் என்ன செய்வார்கள் என்ற கருத்தில் பால் நினைந்துட்டும் தாயைப்போலக் கையில் உணவுக் கலயத்துடன் வந்தான். ஆதலின் தாயின் நல்லான்' என்ற முடிவுக்கு வந்தான். மீனும் தேனும் உள்ளே வந்த குகனை ஒருமுறை கண்ணால் கண்டவுடன் இராகவன், ஒரு வினாடியில் எடையிட்டுவிடுகிறான். குகன் என்ற பெயருடைய அந்த வடிவம் சதையும் எலும்பும் கொண்ட வடிவம் அன்று; முழுதும் அன்பால் ஆகிய வடிவம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். இந்த அன்பு வடிவினனாகிய குகன் எதிரே இராமன் மட்டும்தான் தெரிகின்றான். இராமனைச் சுற்றியுள்ள முனிவர்கள் யாரும் அவன் கண்ணில் படவில்லை. தேவை இல்லாத உரையாடல் எதுவுமில்லாமல், "தேனும், மீனும் பக்குவம் செய்து கொண்டுவந்துள்ளேன். உன் திருஉளம் யாதோ?’ என்றான். கற்று முதிர்தோர்க்குப் பாடம் 'முனிவர் குழாத்திடை வைகும் இராகவன் மீன் உண்பானா என்ற கவலை குகனுக்கு இல்லை. இராமனைச் சுற்றியுள்ள விருத்த மாதவர்கள் இராமன் எதிரே மீன் வைக்கப்பட்டதைக் கண்டு முகம் சுளித்தனர்போலும். அந்த மாதவர்கட்கும், பிராட்டிக்கும், இலக்குவனுக்கும் ஒரு பாடம் கற்பிக்க விரும்புகிறான் வள்ளல். எனவே, விருத்தமாதவரை நோக்கி ஒரு புன்சிரிப்புடன் இராகவன் பேசுகிறான். இராமனுடைய உரையாடல் குகனை நோக்கிப் பேசப்பட்டது என்றாலும், இந்த மாதவர்க்கும் அதில் ஒரு பாடம் கிடைக்கிறது. - - - く "குகனே! நீ கொணர்ந்த உணவு மிக அரியதாகும். எல்லையற்ற உவப்போடும் அன்போடும் தந்திருக்கிறாய்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/240
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை