உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 223 உன்னுடன் வர அனுமதி தருவாயாக" என்று சொன்னவுடன் இராமன் மனம் உருகிவிட்டது. கங்கையின் வடகரையில் இருக்கின்றவரை கூடியிருந்த முனிவர்களும், மாதவர்களும் இந்த வனத்தில் இராமன் எப்படி வாழப்போகிறான் என்று கேட்கவில்லையே! இராமனை வணங்கித் தங்கள் ஆன்ம முன்னேற்றத்திற்கு வழிதேடிக் கொண்ட அந்த முனிவர்கட்கு இராமனைப் பற்றிய கவலை ஒரு சிறிதும் இல்லை. அதனெதிராகப் பரம்பொருள் என்ற சொல்லையே அறியாதவனும், இராமன் அப்பரம்பொருளின் திருஅவதாரம் என்பதை ஒரு சிறிதும் அறியாதவனும் ஆகிய குகன் மனிதாபிமான அடிப்படையில், இராமன் எப்படி வாழப் போகிறானோ என்ற கவலையில் தானும் உடன் வரப்போகிறேன்' என்று பிடிவாதம் செய்கையில், இராமன் மனம் பாகாய் உருகிவிட்டது. "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை" யாகவும், 'அன்பெனும் குடில் புகும் அரசனாகவும் உள்ள இராகவன், குகனுடைய அன்புவலையில் சிக்கி உண்மையிலேயே திணறிவிடுகிறான். எப்படி அவனைத் தடுப்பது என்பது அறியாமல் இறுதியாக ஒன்றைக் கூறினான் இராகவன்: "அன்னவன் உரைகேளா, அமலனும் உரைநேர்வான்; என்உயிர் அணையாய் நீ இளவல் உன் இளையான்; இந் நன்னுதலவன் நின்கேள்; நளிர்கடல் நிலம் எல்லாம் உன்னுடையது; நான் உன்தொழில் உரிமையின் உள்ளேன்" "அங்குஉளகிளை காவற்கு அமைதியின் உளன், உம்பி; இங்குஉளகிளை காவற்கு யார்உளர்? உரை செய்யாய், உன்கிளை எனது அன்றோ? உறுதுயர் உறல் ஆமோ? என்கிளை இது கா, என் ஏவலின் இனிது என்றான்." . கம்ப 1997
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/243
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை