224 38 இராமன் - பன்முக நோக்கில் முதற்பாடலில் அமலன் என்ற சொல்லைக் கம்பன் பயன்படுத்துவது மிகச் சிறப்புடையதாகும். அமலன் என்ற சொல்லிற்குக் குற்றமற்றவன் என்பது பொருள். அறுவகைக் குற்றங்களிலும் நீங்கிய பரமாத்மாவை அன்பு ஒன்றுதான் கட்டுப்படுத்தும். எனவே, குகன் அன்பில் திளைப்பவனும், அமலனும் ஆகிய பெருமான், ‘என் உயிர் அனையாய் நீ என்று சொல்வதன் மூலம் 'குகனுக்குப் பரமபதத்திலேயே இடம் கொடுத்து விட்டேன்' என்ற கருத்தில் பேசுகிறான். "இதோ நிற்கும் இலக்குவன் உன் தம்பி ஆவான். இதோ நிற்கும் சீதை உன் கொழுந்தி ஆவாள். இக்கடல் சூழ்ந்த உலகம் என்னில் மூத்தவனாகிய உனக்குச் சொந்தமானது. உன் ஏவலின்படி நான் நிற்கின்றேன்" என்று இராமன் கூறியதில் மன அமைதிபெறாத குகனை நோக்கி, அன்புகனிந்த கட்டளை ஒன்றை இடுகின்றான். - "சகோதரா! அயோத்தியில் இருக்கும் நம்முடைய சுற்றத்தாரைக் காக்க உன் தம்பியாகிய பரதன் அங்கே இருக்கின்றான். இங்கே உள்ள நம் சுற்றத்தைக் காக்க (உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள்? உன்னுடைய சுற்றம் எனக்கும் சுற்றம்தானே! நீ கவலைப்படத் தேவையில்லை. இங்கே உள்ள என் சுற்றத்தைக் காப்பதற்கு உனக்கு ஆணை இடுகின்றேன்" என்று கூறுவதாகப் பாடலை அமைக்கின்றான் ćSLDLłóõT. மூலநூலில் காணப்படாத இந்த உறவு முறையைக் . கம்பன் உண்டாக்கியதற்கு மூலகாரணம் திருமங்கை மன்னனின் ஏழை ஏதலன் கீழ்மகன் (1418) என்று தொடங்கும் பாடலே ஆகும். - குகன் மூத்தவன் இப்பாடலில் நன்னுதல் நின்கேள் என்று மட்டுமே சொல்லப்பட்டிருப்பினும் அசோக வனத்திலிருந்த சீதையின் நினைவு அலைகளைக் கூறும் பாடலில் (5091 மங்கை கொழுந்தி என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/244
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை