உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 225 கொண்டு விளக்கம் காணவேண்டும். 'கேள்' என்ற சொல்லுக்குக் கொழுந்தி எனப் பொருள் கொள்வதே முறை. அவ்வாறு கொண்டால், குகனைத் தன்னைவிட மூத்தவனாகவே பெருமான் கருதுகிறான் என்று கூறுவதில் தவறில்லை. இளையவன் மனைவியைத்தான் கொழுந்தி என்று சொல்வது மரபாதலின் இங்கே குகனை அண்ணன் என்று கருதியே இராகவன் பேசுகிறான் என்று சொல்வதில் தவறில்லை. வனத்திற்கு ப் புறப்பட்ட இராகவன் மூன்று 'சகோதரரைச் சேர்த்துக் கொள்வதாகக் கம்பன் பாடுகிறான். இம்மூவரும், அதாவது குகன், சுக்கிரீவன், வீடணன் என்ற மூவரும் மூன்று வகையைச் சேர்ந்தவர்கள். ஒன்றுக்கொன்று மாறுபட்ட இயல்புகளைக் கொண்டவர்கள். கல்வி, கேள்வி, அறிவு, ஞானம் என்பவற்றின் ஒரெழுத்தைக்கூட அறியாதவன், நாகரிக வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாதவன் குகன். இந் நான்கிலும் இணையற்று இருப்பவன் வீடணன், இடைநின்ற சுக்கிரீவன் இந்த இரண்டு வகையிலும் சேராதவன். நம்மைப் போன்ற சராசரி மனிதனின் பிரதிநிதி ஆவான் அவன். தசரதராமனும் மூலராமனும் ஆகிய இராகவனை முழுமையாக ஏற்றுக்கொண்டு தன்னையே அவன்பால் தந்த பெருமை குகன் ஒருவனுக்கே உரியது. பிறர், குகனை வேடனாக - முரட்டு உடம்பை உடையவனாக. சினம் கொப்பளிக்கும் முகத்தை உடையவனாகக் கண்டார்கள். ஆனால், தசரதராமன் இவற்றையெல்லாம் கடந்து குகனுடைய மனத்தினுள்ளே புகுந்து பார்க்கிறான். இராமன் கண்ட காட்சியைச் சேக்கிழார் கண்ணப்பரை வருணித்ததற்கு இணையாகக் கூறலாம். "தன் பரிசு, வினை இரண்டு சாரும் மலம் மூன்றும் அற அன்பு பிழம்பாய்த் திரிவார்.” (கண்ணபுராயம். 154) எனக் கண்ணப்பரை வருணிக்கிறார் சேக்கிழார். அன்புப் பிழம்பாய்த் திரியும் ஒருவனாகவே குகனை இராமன் கண்டான். கண்ணப்பன் படைத்த பன்றி இறைச்சியைக் காளத்திநாதன் ஏற்றுக் அ-15
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/245
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை