பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 38 இராமன் - பன்முக நோக்கில் கூறியவுடன் அவனைப் பற்றி எதுவுமே தெரியாமலே கூட 'என் கிளை உன் கிளை, உன் சுற்றம் என் சுற்றம், நீ என் இன்னுயிர்த் துணைவன் என்று முடிவாகக் கூறிவிட்டான். இராமனுடைய ஈடுஇணையற்ற இரக்கத்தால் தகுதி அற்றவனுக்கும் வாக்குத் தந்த கதை ஆகும் இது. அவசரப்பட்டுச் சுக்கிரீவனை ஏற்றுக்கொண்டதால் வாலியைக் கொல்லும் நிலை ஏற்பட்டது. வாலியின் உரையாடலுக்குப்பின் தான் செய்தது சரியோ என்ற வினா இராகவன் மனத்தில் தோன்றியது உண்மைதான். இதுபற்றிப் பின்னர்க் காணலாம். சுக்கிரீவன் நம்பிக்கையும் ஐயமும் சுக்கிரீவன் சலனபுத்தி உடையவன் என்பதைக் கதைப் போக்கில் அறிந்துகொள்ள முடியும். இராமனை முதன்முதலில் சந்தித்தபோதுதுரத்தே நின்ற சுக்கிரீவன் மனத்தில் தோன்றிய முதலாவது எண்ணம், இராமன் தெய்வத்தன்மை யுடையவன் என்பதே. சிவன், பிரமன் முதலானோரை மானுடம் வென்றது என்று கொள்ளுதற்கேற்ற நிலையினன் இராமன் என நம்பியவனாகக் கருத்துரைக்கிறான், சுக்கிரீவன்: "தேறினன் - 'அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம்தேவர் அன்றே, மாறி, இப்பிறப்பில் வந்தார் மானிடர் ஆகிமன்னோ, ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள்ஆதி வேறுஉள குழுவை எல்லாம், மானுடம் வென்றது. அன்றே!" - . - கம்ப. 3804 இத்துணை உறுதியாகப் பேசிய இதே சுக்கிரீவன் இராமனுடைய ஆற்றைைல சந்தேகிக்கும் இடமும் உண்டு. உன் தமையனைக் கொன்று 'தாரமொடு தலைமையும் தருகுவென் (3855) என்று இராமன் கூறிய பிறகு சுக்கிரீவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. என்ன இருந்தாலும், இவர்கள் மனிதர்கள்தாமே இராவணனையே வாலில் கட்டும் வாலியை இந்த மனிதர்களா வெல்ல முடியும்? என்ற சந்தேகம்