உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 229 வந்துவிட்டது. அமைச்சரவையைக் கூட்டினான். தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான். அவன் மனம் உடையும் பொழுதெல்லாம் அவனுக்குத் தைரியமூட்டும் கடமையை விடாது செய்த அனுமன் இப்பொழுதும் உதவிக்கு வருகிறான். உன்னினேன், உன்தன் உள்ளத்தின் உள்ளத்தை, உரவோய்! அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஒர் ஆற்றல், இன்ன வீரர்பால் இல்லை, என்று அயிர்த்தனை (3858) என்று தொடங்கிய அனுமன், இராமனுக்கு ஒரு சோதனை வைக்குமாறு தந்திரம் சொல்லித் தருகிறான். ‘அரசே! இராமன் என்பவனின் கையிலும், தாளிலும் சங்கு சக்கரக் குறி உள. இத்தகைய இலக்கணம் பொருந்தியவர் இந்த உலகத்தில் எங்கும் இல்லை. "அத்திரு நெடுமாலே செங்கையில் வில்லை ஏந்திய இராமனாக இங்கு உதித்துள்ளான்." (3859) "திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் வில்லாகிய சிவதனுசை முறிக்கும் ஆற்றல் பெற்றவன் இவன் என்றால், அச்செயல் மாயவனைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும்?” (3860) இத்தனை கூறியும் இன்னும் தன் அரசனாகிய சுக்கிரீவன் இராமனது ஆற்றலை அறிந்து கொள்ளவில்லை யென்றால் அதை அறிவதற்கு ஓர் உபாயம் உண்டென்று அனுமன் சொல்கிறான். பிரசித்தி பெற்றனவாகிய மராமரங்கள் ஏழினுள் ஒன்றைத்துளைக்குமாறு இராமனை வேண்டிக்கொள்வாயாக' என்று அனுமன் கூற, இந்தச் சுக்கிரீவன் அதனைச் செய்யுமாறு இராமனை வேண்டுகிறான். மராமரங்களின் பக்கத்தில் இராமனை அழைத்துச் சென்று "இந்த ஏழு மரங்களில் ஏதாவது ஒன்றில் உன் கணையைப் போக்கி அதனைத்துளையிடுவாயானால், என் மனத்தில் உள்ள ஐயமும் துன்பமும் போகும் என்று கேட்டுக் கொள்கிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/249
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை