கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் ேே 7 நிலையிலும் எந்த இராமாயணமும், இராமனைக் குற்றங்குறை உடையவனாகச் சித்தரிக்கவில்லை என்பதை அறிதல் வேண்டும். வான்மீகம், பெளம சரிதம், பத்ம புராணம் ஆகிய அனைத்திலும் இராமன் மனிதருள் மாமனிதனாகச் சித்தரிக்கப்படுவதை அறிந்துகொண்ட கம்பநாடன் தானும் அதனையே பின்பற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக் கிறான். ஆனால், அவன் தோன்றிய தமிழகத்தில் சங்ககாலம் தொட்டே இராமனைத் திருமாலின் அவதாரம் என்று கருதிய கொள்கை மிகவும் வலுப் பெற்றிருந்தமையின் அந்தக் கொள்கையையும் விட்டுவிடக் கம்பன் விரும்பவில்லை. எனவே, ஒருபுறம் ஒப்பற்ற மனிதனாகவே இராமன் படைக்கப் படுகிறான்; மறுபுறம் அதே இராமன் பரம்பொருளின் அவதாரமாகப் படைக்கப்படுகிறான். ஒரே பாத்திரத்தைக் கடவுளாகவும் மனிதனாகவும் சித்தரிப்பது மிக ஆபத்தான ஒரு முயற்சி ஆகும். மனிதன் தவறு செய்தால், அது தெய்வத்தின் தலையில் ஏற்றப்படும். பழைய கிரேக்கக் காப்பியங்களில்கூடத் தெய்வங்கள் இடம் பெறுகின்றன. ஆனால் அவை தெய்வங்களாகவே தோன்றித் தம் பணியை முடித்துச் செல்கின்றன. இதனெதிராகத் தெய்வத்தை மானிட உருத் தாங்கி வந்து பணிபுரியுமாறு செய்த காப்பியங்கள் இரண்டாகும். அவை இராமாயணமும், பாரதமும் ஆகும். திருமாலே கண்ணனாகத் தோன்றிப் பணிபுரிவது பாரதத்தில் பேசப்படுகிறது. வியாசபாரதம், ரீமத் பாகவதம் ஆகிய இரண்டும் ஐயத்திற்கு இடமின்றி கிருஷ்ணன் மகாவிஷ்ணு வின் அவதாரம் என்று தெளிவாகக் கூறிவிடுகின்றன. கிருஷ்ண பரமாத்மா பரம்பொருளாகவும், அருச்சுனனின் தோழனான கண்ணனாகவும் பணிபுரிவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. கிருஷ்ணாவதாரம் முழுவதிலும் தான் இறைவன் என்பதைக் கிருஷ்ணன் பலரும் அறியக் காட்டிக் கொள்கிறான். பாண்டவர், பீஷ்மர், விதுரர் முதலியோர் கண்ணன் யார் என்பதை அறிந்து போற்றும் பொழுது அதைக் கிருஷ்ணன் ஏற்றுக்கொள்கிறான் என்றே அந் நூல்கள் பேசுகின்றன.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை