230 38 இராமன் - பன்முக நோக்கில் 'தானம் கொடுத்த மாட்டுக்கு பல் எத்தனை என்று பார்த்தான் என்று ஒரு பழமொழி உண்டு. இவனை ஒன்றும் கேளாமலே இருக்கும் பொழுதே வாலியைக் கொல்வேன், தாரமொரு தலைமையும் தருவேன்' என்று தானே முன்வந்து இராமன் கூறினான். அப்படி இருக்கையில் அவனைச் சந்தேகப்பட்டு மராமரத்தில் அம்பு எய்க என்று கூறுவது சுக்கிரீவனுடைய தரம் தாழந்த மனநிலையைக் குறிக்கின்றது. அப்படி இருந்தும் அந்தக் கருணை வள்ளல் இந்த வேண்டுகோளையும் ஏற்று, மராமரத்தில் அம்பு ஒட்டினான் என்றால், அது தசரதராமனின் மாமனிதப் பண்பாட்டிற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். சுக்கிரீவனுக்கு அரச நீதி இராமனே விளக்கும் இராம ராச்சியம் வாலியைக் கொன்ற பிறகு, இலக்குவனைக் கொண்டு சுக்கிரீவனுக்கு முடிசூட்ச் செய்கிறான் இராகவன். அது முடிந்தவுடன் இரலைக்குன்றத்திலிருந்து தலைநகரான கிட்கிந்தைக்குப் புறப்படும் சுக்கிரீவன் இராமனையும் உடன் வருமாறு அழைக்கின்றான். அந்த வேண்டுகோளை மறுத்த இராமன், தான் எடுத்துக்கொண்ட பணி முடிகின்றவரையில் துறவியாக வாழ்வதே முடிவு என்று கூறிவிட்டான். இந்த நிலையில் சுக்கிரீவனை எதிரே வைத்துக்கொண்டு ஒரு நல்ல அரசன் எப்படி ஆட்சி செய்யவேண்டும் என்பதை எடுத்துக் கூறுகிறான். இந்தப் பகுதியில் இராமனின் நுண்மாண்துழைபுலத்தை நன்கு அறிய முடிகிறது. இதுவரை சுக்கிரீவனிடமும், அனுமனிடமும் பழகிய அண்ணல், இருவரையும் மிகத்துல்லியமாக எடையிட்டிருந்தான். ஒன்பது பாடல்களில் (4123 - 413, சுக்கிரீவனுக்கு அரசநீதி புகட்டுகிறான். அதே நேரத்தில் தன்னுடைய உபதேசம் செவிடன் காதில் ஊதிய சங்கநாதமே என்பதை நன்கறிந்து கொண்டான் வள்ளலாகிய இராமன். என்றாலும், ஒரு கற்றறிந்த அரசனுக்குச்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/250
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை