பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 231 சொல்வது போல் அல்லாமல், சாதாரண மனிதனுக்குச் சொல்வது போல் இராமன் புகட்டுகிறான். இராமராஜ்ஜியம் என்று பின்னர் மக்களால் போற்றப்பட்ட ஒரு நல்லரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை இராமன் கருத்தாகவே கவிஞன் கூறுவதில் ஒன்றிரண்டு பகுதிகளை காணுவது நலம. - சார்ந்தோர்பால் பழகும் முறை "அறிவும், வாய்மையும் பெற்ற நன்மாந்தர்களை அமைச்சர்களாகக் கொள்க; தீய எண்ணம் மனத்தில் இல்லாமல் நல்லொழுக்கம் உடைய மறவர்களைப் படைவீரர்களாகக் கொள்க; நீயும் மனந்துயவனாக இருந்து அத்தகையவர்களோடு நட்புப் பூண்டு வாழ்க. மேலே கூறப்பெற்ற இத்துணைப் பேருடனும் நீ பழகும் பொழுது மிகவும் நெருங்கிப் பழகிவிடாமலும் அதிக தூரத்தில் அவர்களை வைத்துவிடாமலும் (சேய்மையோடு அணிமை இன்றி) பழகுவாயாக. மிகவும் நெருங்கினால் பொருந்தாத உரிமைகளை அவர்கள் பெற்றுக் கொள்ள முயல்வார்கள். துரத்தே அவர்களை வைத்துவிட்டால் அவர்களால் கிடைக்கும் நற்பயனை நீ அடைய முடியாமல் போய்விடும்" என்ற கருத்தையே இராகவன் இங்குக் கூறுகிறான். வள்ளுவப் பெருந்தகையின் அகலாது, அணுகாது தீக்காய்வார் போல்க இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் என்ற அருங்குறளை (குறள் 691) மனத்தில் கொண்டு அதற்கொரு புதிய விளக்கத்தைத் தருகிறான் கவிஞன். வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும் தூய்மைசால் புணர்ச்சி பேணி, துகள் அறு தொழிலைஆசி, சேய்மையோடு அணிமை இன்றி, தேவரின் தெரிய நிற்று. - கம்ப 4122 என்ற பாடல் அரசியல் நுட்பம் மிக்கது. திருவள்ளுவர் குறள், அரசரைச் சார்ந்தவர்கள் அரசரிடமிருந்து மிக