உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 233 சூழ்ச்சிகளில் ஈடுபடவும் கூடும். அரசனை ஏமாந்தவன் என்று நினைப்பதால் இவர்கள் சூழ்ச்சி வெளிப்படையாகவும் நடைபெறலாம். எனவே, இந்த இரண்டு வகையிலும் பகைவர்களுடன் பழகுவது தேவை என ஆழ்ந்த அரசியல் ஞானியான இராகவன் கூறுகிறான். - மேலும் சில நெறிகள் "செய்ய வேண்டியவற்றைச் தவறாது செய்தல், எக்காலத்தும் எக்காரணம் கொண்டும் தீயனவற்றிற்கு மனத்தில்கூட இடம் தராது இருத்தல்; பிறரை ஏசவேண்டிய நேரத்தில் கூட ஏ சாது இனியவற்றையே கூறுதல், உண்மையானவற்றையே பேசுதல், பிறர் பொருளை விரும்பாதிருத்தல் ஆகிய இப்பண்புகள், கடைப்பிடிப்பாரை இவை உய்யச் செய்யும். இவர்களோடு சேர்ந்தவர்களையும் கடைத்தேற்றும். (4125). எளியவர் என்று எண்ணி, எவரையும் புண்படுத்தாதே "ஒருவரைப் பொருட்படுத்த வேண்டாத அற்பர்கள் என்று நினைத்து அவர்கள் நோவடையும்படி செய்யாதிருக்க வேண்டும். இந்த நீதியைக் கடைப்பிடிக்காமல், உடம்பு குறுகிய கூனி ஒருத்திமேல் மண் உருண்டையை யான் வீசியதால் அவள் வெறுப்புக்கு ஆளாகி அரசைத்துறந்ததோடு, மனைவியையும் இழந்து துயரக்கடலில் சிக்கியுள்ளதைக் காண்பாயாக" என்ற பொருள்பட இராமன் கூறுகிறான்: குறியது ஆம்மேனி ஆய கூணியால், குவவுத் தோளாய்! வெறியன எய்தி, நொய்தின்வெந்துயர்க் கடலின்விழ்ந்தேன்" - கம்ப 4124 நல்லோரைக் பேணுக அல்லோரை ஒறுத்திடுக "சிறியர் என்று ®ಕpಣ விடாதே" என்று கூறிய இராகவன், "அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/253
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை