உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 235 சுக்கிரீவனுக்கு அனுமன் துணை தேவை ஒன்பது பாடல்களில் உபதேசம் செய்த பிறகு சுக்கிரீவனைக் கிட்கிந்தைக்கு அனுப்பிவிட்டு, அனுமன் பக்கம் திரும்புகிறான் இராகவன். தன்னுடனேயே தங்கித் தனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று முனைந்து நிற்கும் சொல் லின் செல்வனாகிய அனுமனைப் பார்த்து 'இப்பொழுதைக்கு நீ சுக்கிரீவனுடன் இருந்தே தீர வேண்டும்’ என்று ஆணையிடும் அரசியல் ஞானியாகிய இராகவன் அதற்குரிய காரணத்தை மிக விளக்கமாக, அற்புதமாகப் பேசுகிறான். "நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற வரம்பு இலாததனை, மற்று ஒர் தலைமகன் வலிதின் கொண்டால், அரும்புவ, நலனும் தீங்கும்; ஆகலின், ஐய! நின்போல் பெரும்பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா! - கம்ப 4,143 இப்பாடலின் முதல் இரண்டு அடிகளுக்குப் பொதுவான ஒரு கருத்தை இராகவன் பேசுகிறான் என்றே இதுவரை அனைவரும் பொருள் எழுதியுள்ளனர். ஒரு பாடலுக்குப் பொருள் செய்யும் பொழுது பேசுபவன், பேசும் இடம், பேசக் கேட்பவன், பேசப்படும் சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வது நலம். இங்குப் பேசுபவன் இராகவன், பேசக் கேட்பவன் சுக்கிரீவனின் உறுதுணையான அனுமன். பேசும் இடம் சுக்கிரீவனுக்கு அதிகாரம் கிடைத்த இடம். சூழ்நிலையும் சந்தர்ப்பமும் வாலி இறந்த ஒரிரு நாட்களிலாகும். நிரம்பினான் ஒருவன் என்று இராமன் குறிப்பது வாலியையே ஆகும். நிறை அரசு என்பது எவ்விதக் குறையுமில்லாமல் அந்த வினாடி வரை வாலியால் காக்கப்பட்ட கிட்கிந்தை அரசாகும். வலிதின் பற்றி என்ற
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/255
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை