236 38 இராமன் - பன்முக நோக்கில் தொடர், தனக்கொரு துணை கிடைத்தது என்ற ஒரே காரணத்தினால் வேறு எவ்வித முகாந்திரமும் இன்றி வலியச் சென்று போரிட்டுச் சுக்கிரீவன் கைப்பற்றிய அரசு என்பதைக் குறிக்கும். அனைத்துப் பண்புகளும் நிரம்பிய ஒருவன் குடிகளுக்கு எவ்விதக் குறையும் இல்லாமல் காத்த அரசை வலிந்து பற்றி மற்றொருவன் ஆளத் தொடங்கினால், அந்த குடிமக்கள் சென்ற அரசையும், நடைபெறுகின்ற அரசையும் ஒப்பிட்டுப் பாராமல் இருக்க மாட்டார்கள். அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்தால் நலம், தீங்கு இவற்றில் சிலசமயம் தீங்கும், சிலசமயம் நலமும் தலைதுாக்கி நிற்கும். அப்பொழுது குழப்பம் ஏற்படுவது உறுதி. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அதிகாரத்தை வலுவில் பற்றியவன் தன் பலத்தினால் அதனை அடக்கப்பார்ப்பான். அது இறுதியில் தீமையையே விளைவிக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் கல்வி, ஞானம், அறிவு, பொறுமை ஆகியவற்றை நிரம்பப் பெற்ற அனுமன் போன்ற அமைச்சர்கள் அரசனின் பக்கலில் இருந்து அறவுரை வழங்கவேண்டும் என்ற கருத்துத்தான் இப்பாடலில் பேசப்படுகிறது. நட்புக் கொண்டு சகோதரனாக ஏற்றுக் கொண்ட பின் சுக்கிரீவனின் நலத்திலே இராமன் அக்கறை காட்டுவதை இதன்மூலம் அறிகிறோம். இராமன் பற்றிய ஒரு புதிய பரிமாணம் வாலியை நடுவுநிலைக் கண்ணோட்டத்தோடு பாராதவர்கள் வாலி வதைப்படலம் என்று பெயரிட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக அதுவே நிலைத்துவிட்டது. பிறன்மனை நயந்தான் என்ற ஒரு குற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாலியோடு போர் செய்த இராகவன், அவன் உரையாடலிலிருந்து அவன் எத்தகையவன் என்பதைக் கண்டு கொண்டான். மனித குலத்துக்குள்ள 'ஒருவனுக்கு ஒருத்தி என்ற அறம், வனத்திடை வாழும் குரங்குகட்கு இல்லை என்று வாலி கூறிய அமைதி இராகவன் மனத்தில் படிந்திருக்க வேண்டும். ஏனைய பண்புகளில் வாலி எவ்வளவு உயர்ந்தவன் என்பதை உணர்ந்துகொண்ட இராகவனுக்கு இறுதியாக
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/256
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை