உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 237 வாலி கூறிய இரண்டு செய்திகள் ஏறத்தாழ அதிர்ச்சியையே தந்துவிட்டன. தன்னைக் கொல்வித்தான் தம்பி என்பதை மறந்து, “குடிவெறியில் அவன் நன்றி மறந்தாலும், என்மேல் ஏவிய அம்பை அவன் மேல் ஏவிவிடாதே!" என்று வரங்கேட்டது, ஒன்று. அடுத்து, "என் தம்பியாகிய சுக்கிரீவன் இந்த வெற்றரசை ஏற்றுக்கொண்டு, இராமா! உன் மூலம் வீட்டரசை எனக்கு நல்கினான்" என்று கூறிய செய்தி. இராமனைக் கொணர்வித்ததும், தன்னைக் கொல்வித்ததும் அறிவில் குறைந்த தன் தம்பி சுக்கிரீவனால் ஆகக் கூடிய ஒன்றன்று; இது நடைபெற்றது பேரறிவாளனாகிய அனுமன் சூழ்ச்சியே என்பதை வாலி நன்கு அறிந்திருந்தான் என்றே கருதவேண்டும்.* ஆயினும், அனுமனைத் தன்னைக் கொல்வித்த பகைவன் என்று நினையாமல், " இராமா! அனுமனைச் சாதாரணமானவன் என்று நினைத்துவிடாதே, நின் செங்கைத் தனுஎன நினைதி” என்றும் கூறுகின்ற வாலி மிக மிக உயர்ந்தவன் என்பதை நன்கு அறிந்துகொண்டான் இராமன். ஆகவேதான் அவனை நிரம்பினான் ஒருவன்' என்று கூறினான். இன்று வரை எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருந்த கிட்கிந்தையை நிறையரசு என்று கூறினான். இறுதி நின்ற வரம்பு இலாதது என்றால் வாலியின் ஆட்சியால் செல்வத்தின் எல்லை காண முடியாததாய் உள்ளது என்று இராகவனே கூறுவதால், வாலியின் ஆட்சி, அl ) அடிப்படையில் அமைந்திருந்ததால்தான் வரம்பிலாச் செல்வம் அங்கு இருந்தது என்று கூறுகிறான். மற்று ஒர் தலைமகன் வலிதின் கொண்டால் என்பது சுக்கிரீவனைக் குறிக்கும். எவ்வித அடைமொழியும் தராமல் மற்று ஒர் தலைமகன்' என்று கூறியதால், நிரம்பினானுக்குள்ள தகுதி இவன்பால் இல்லை என்பதையும் கூறியதாயிற்று. வலிதின்
வாலி வதையை நிகழ்வித்தவன் அனுமனே என்பதை, 'அறிந்து திறந்து ஆறு எண்ணி, அறத்து ஆறு அழியாமை மறிந்து உருள, போர் வாலியை வெல்லும் மதிவல்லீர் என்ற தொடரால் அறியலாம். அனுமனின் இச்செயல்பாட்டைச் சாம்பவான் குறித்துக் கூறினான். (கம்ப. 4723)