238 38 இராமன் - பன்முக நோக்கில் கொண்டால் என்றதால் வேறு காரணமின்றியும் ஒப்பற்ற ஒரு துணை எதிர்பாராமல் கிடைத்ததால் அத்துணையைப் பயன்படுத்திக் கொண்டு வலிதிற் சென்று பயன்படுத்தினான் என்பதனையும் கூறியதாயிற்று. முன்னைய ஆட்சியைப் போலவே, பின்னைய ஆட்சியும் இருந்து விட்டால் நிரம்புவ நலனும் என்று மட்டும் கூறியிருப்பான். ஒத்த பண்புடையவர்கள் ஆட்சிமாற்றத்தில் வேறுபாடு ஒன்றும் தெரியக் காரணம் இல்லை. இந்த இடத்தைப் பொறுத்தமட்டில் நிரம்பினான் ஆட்சியை, நிரம்பாதவன் வலிதிற் கொண்டான். எனவேதான், நலனும் தீங்கும் நிரம்புவர் என்றான் இராகவன். வறுமையில் வாடியவன் திடீர் என்று செல்வத்தைப் பெற்றதால் அறிவிழந்து செயற்படும் சூழ்நிலை உருவாகக் கூடும். ஆதலால், அறிவுடை அமைச்சனாகிய அனுமன் உடன் இருக்க வேண்டும் என்று சுக்கிரீவன் இல்லாதபொழுது அனுமனைத் தனியே அழைத்து இந்த நுண்மையான கருத்துகளைக் கூறினான் என்றால், இராமனுடைய அரசியல் அறிவை - எதிரது நோக்கும் நுண்மாண் நுழைபுலத்தை, எதிரே உள்ளவர்களை நண்பர், பகைவர் என்ற வேறுபாடின்றி எடைபோட்டு அறியும் பேராற்றலை - அறிவிக்கக் கவிஞன் இப்பகுதியைப் பயன்படுத்திக் கொள்கிறான். தன் காப்பிய நாயகனின் இத்தகு பண்புகளை வெளியிடக் காப்பியத்தில் ஓர் இடமின்மையால் இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியற்படலம் என்ற தலைப்பையும் தந்த இராமனிடம் இதுவரை வெளிப்படாத ஒரு புரிமாணத்தைக் காட்ட கவிஞன் கையாண்ட வழியாகும் இது. இராமன் முடிசூடும் சூழல் ஏற்பட்டபோது தயரதன் வேண்டுகோளை ஏற்று, வசிட்டன் இராமனுக்கு ஆட்சியியல் பற்றி அறிவுரை கூறுகிறான். (1412 -27). அந்த அறிவுரைப்படி ஆட்சி நடத்தும் வாய்ப்பு இராமனுக்கு ஏற்படவில்லை. ஆயினும், ஆட்சிக் கலை இராமனுக்கு இயல்பாக வாய்த்தது தானே நீந்தத் தெரிந்த மீன் குஞ்சு வசிட்டனாகிய முனிவரன் கூறிய அரசியல் நெறிகளும் அரசர் குடியினனாகிய இராமன் கூறிய அரசியல் நெறிகளும் ஒப்பிட்டு உணரத்தக்கன.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/258
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை