240 38 இராமன் - பன்முக நோக்கில் "வெம்பு கண்டகர் விண்புக வேர் அறுத்து, இம்பர் நல்அறம் செய்ய எடுத்த விற் கொம்பும் உண்டு; அருங்கூற்றமும் உண்டு; உங்கள் அம்பும் உண்டு" என்று சொல்லு, நம் ஆணையே." - கம்ப 4272 மேலே கூறிய சொற்களை வரிசையாகப் பார்க்கும்பொழுது, இராகவனின் சினம் உச்சகட்டத்தை அடைந்துள்ளதைக் காணலாம். நன்றி என்ற சொல்லுக்கே வடிவாக அமைந்துள்ள இராமன் நன்றி கொன்றவர்களை நினைக்கும்பொழுது இவ்வளவு சினம் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. சினத்தின் எல்லையில் நின்று, "விற்கொம்பும் உண்டு, அருங்கூற்றமும் உண்டு, உங்கள் அம்பும் உண்டு என்று சொல்லு, நம் ஆணையே” என்று கூறிக்கொண்டு வரும்பொழுதே இராகவன் மனக்கண் முன் திடீர் என்று ஒரு காட்சி தோன்றுகிறது. சாகும் தருவாயில் இருந்த வாலி கேட்டுக்கொண்ட வரமாகும் அது. 'பெருமானே ! பெருங்குடியனாகிய என் தம்பி புத்திகெட்ட நிலையில் உனக்குத் தவறிழைப்பானாயின் தயைகூர்ந்து என்மேல் ஏவிய அம்பை அவன் மேல் ஏவிவிடாதே" என்ற பொருளில் - பூ இயல் நறவறம் மாந்தி, புந்திவேறு உற்ற போழ்தில், தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல் ஏவியபகழி என்னும்கூற்றினை ஏவல் என்றான்." - கம்ப 4068 வாலியின் வேண்டுகோளை நினைவுகூர்கிறான். தான் இதுவரை சினத்துடன் பேசிய சொற்களை ஏற்றுக்கொண்டு சுக்கிரீவன்பால் சென்றால், இலக்குவன் சுக்கிரீவனை அழித்துவிடுவான் என்ற எண்ணம் இராகவன் மனத்தை உறுத்திற்று. எனவே, இந்தக் கடுஞ்சொற்களைக் கூறி முடித்த பிறகு தம்பிக்கு மற்றுமோர் ஆணை இடுகிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/260
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை