உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 241 "நீதி ஆதி நிகழ்த்தினை, நின்று, அது, வேதியாத பொழுது, வெகுண்டு, அவண் சாதியாது, அவர் சொல்தரத் தக்கனை, போதி ஆதி என்றான் - புகழ்ப் பூணினான்." - கம்ப 4276 சிறந்த சிந்தனையாளனும் அருளாளனும், பிறர் குற்றத்தை மன்னிக்கும் இயல்புடையவனுமான இராகவன் இந்தக் கடைசி ஆணையை இலக்குவனுக்கு இடாதிருந்திருந்தால் இராமாயணக் கதையே வேறுவிதமாக முடிந்திருக்கும். இராகவன் கோபம், நன்றி கொன்ற சுக்கிரீவன்மேல் எவ்வளவு விரைவாக உச்சகட்டத்தை அடைந்ததோ, அதே விரைவுடன் ஒரே வினாடியில் கீழ் இறங்கிவிட்டது. "விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே, சீரொழுகு சான்றோர் சினம்’ (மூதுரை 23) என்ற மூதுரைப் பாடலுக்கு முழு இலக்கணமாக விளங்குகிறான் இராகவன். இராகவன் ஆணையுடன் சென்ற இலக்குவன் கிஷ்கிந்தையை ஒரு கலக்குக் கலக்கி, குடிமயக்கத்தில் இருந்த சுக்கிரீவனை இராகவனிடம் வருமாறு செய்து விடுகிறான். வந்த சுக்கிரீவன் இராமன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தன் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறான். சரணம் என்று தன் திருவடிகளில் வீழ்ந்த சுக்கிரீவனைப் பார்த்தவுடன், இராமனுடைய கோபத்தி முற்றிலுமாக அவிந்து விட்டது. சுக்கிரீவனைப் பார்த்து, "என் தம்பி பரதன் போன்றவனாகிய நீ இப்படிப் பேசலாமா?" என்ற பொருளில் "பரதன் நீ! இணையன பகரற்பாலையோ?” (40) என்று பேசுகிறான். தக்க காரணம் இருந்தமையால் இராகவன் சினம் உச்சகட்டத்திற்குச் சென்றது என்றாலும், இயல்பிலேயே அருளாளனாகிய அவன் சுக்கிரீவன் மன்னிப்புக் கேட்டவுடன் அனைத்தையும் மறந்து பரதன் போன்றவன் நீ என்று பேசுகிறான் என்றால், அது அவனுடைய மானுடத் தன்மையின் மேம்பட்ட இறைத் தன்மையை நினைவூட்டுகின்றது. இந்த இடத்தில், அ-16
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/261
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை