உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ே 243 சிறந்த எடுத்துக்காட்டு. அரசியல் அறிவும், மனித உறவுகள் பற்றிய அறிவும் இல்லாதவர்கள் சுக்கிரீவன் முதலானவர்கள். அப்படிப்பட்டவர்களை அவர்கள் கருத்தைக் கூறுமாறு கேட்பது ஆபத்தான விஷயம்தான் என்றாலும், தங்களையும் ஒரு பொருட்டாக மதித்துக் கருத்தைக் கேட்கிறான் இராகவன் என்கிற திருப்தி அவர்களுக்கு ஏற்படுமன்றோ?. ஆலோசனை சபையில் முதலில் கருத்தைக் கூறியவன் அரச மரியாதைக்குரியவனான சுக்கிரீவன் ஆவான். அண்ணனைக் கொல்ல நட்பைத் தேடி, அந்த நட்பின் மூலம் தன் காரியத்தைச் சாதித்துக்கொண்ட சுக்கிரீவன் தன் வரலாற்றை அடியோடு மறந்துவிட்டு, "அண்ணனுக்கு விரோதமாக வந்த இந்தத் தம்பியைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அண்ணனுக்குத் துரோகம் செய்தவன் நாளை நமக்குச் செய்யமாட்டான் என்பது என்ன உறுதி என்று பேசினான் சுக்கிரீவன். நீலன், சாம்பன் முதலியவர்களும் இதே பல்லவியை ஸ்வரங்களை மாற்றிப் பாடினர். இராமன் இக்கட்டான நிலையில் அகப்பட்டுக்கொண்டான். வீடணனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இராமனின் தீர்ந்த முடிபாகும். ஆனால், ஒருவர்கூட அம்முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. இராகவன் மாருதியின் அறிவுத் திறனை மலைபோல் நம்பியிருந்தான். என்றாலும், மகாராஜாவும் அவனுடைய அமைச்சர்களும் பேசுகின்ற சபையில் அவர்களுடன் சமமாகப் பேச மாருதிக்கு இடமில்லை. இந்த இக்கட்டைப் போக்க இராமன் ஓர் அருமையான வழியைக் கையாள்கிறான்."இங்கே உள்ளவர்கள் அனைவரும் ஒரே வகையான முடிவைக் கூறிவிட்டனர். மாபெருங் கேள்வி ஞானம் உடைய நீ என்ன சொல்லுகிறாய்" என்று கேட்கிறான் இராகவன். மாருதி ஒருவனே இலங்கைக்குச் சென்றுவந்தவன்; உறங்கும் போது வீடணனைப் பார்த்தவன்; பிறர் வீடணன் பற்றிப் பேசுவதைக் கேள்வியுற்றவன். அவனாகச் சொல்வதற்கு அவனுக்குப் 'பதவி ஒன்றுமில்லை. ஆதலால், இதுவரை வாய்மூடி இருந்தான். அப்படிப் பேசுவதாக இருந்தாலும், தன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/263
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை