244 38 இராமன் - பன்முக நோக்கில் தலைவனாகிய சுக்கிரீவனுக்கு எதிராகப் பேச உரிமையில்லை. இந்தச் சிக்கல்களையெல்லாம் மனத்தில் கொண்ட தேர்ந்த அரசியல் ஞானியாகிய இராகவன், தானே அவனைக் கேட்பது போல ஒரு வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்தான். உன் கருத்து என்ன ?' என்று கேட்டதால், சுக்கிரீவன் முதலானோர்க்கு மாறுபட்டு இருப்பினும், தன் கருத்தைச் சொல்ல மாருதிக்கு வாய்ப்பளித்து விட்டான் இராகவன். பல்வேறு காரணங்களைக் காட்டி, வீடணன் ஏற்றுக் கொள்ளத் தக்கவனே என்று மிக்க அடக்கத்துடன் கூறினான், அனுமன். இதற்குமேல் இந்த ஆலோசனையை நீட்டிக்க விரும்பாத தசரதகுமாரன், - "மாருதி அமுதவார்த்தை செவிமடுத்து, இனிதுமாந்தி, பேர் அறிவாள! நன்று நன்று எனப் பிறரை நோக்கி, 'சிரிது; மேல் இம்மாற்றம் தெளிவுறத் தேர்மின் என்னா, ஆரியன் உரைப்பதானான்; அனைவரும் அதனைக் கேட்டார்." - கம்ப 6467 'மாருதி ஆராய்ந்து சொன்ன முடிவே சிறந்த முடிவாகும். அறிவு தெளிந்து ஆராய்ந்தால் இந்த முடிவே சிறந்தது என்ற முடிவுக்கு வருவீர்கள் என்று சொல்லிச்செல்லும் சொல் வல்லானாகிய இராகவன் சுக்கிரீவன் முதலானோர் இடைமறித்துப் பேசவிடாமல் மிக அற்புதமாகப் பின்வரும் பாடல்மூலம் ஆலோசனை சபைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றான். "ஆதலான், "அபயம்!" என்ற பொழ்தத்தே, அபயதானம் ஈதலே கடப்பாடு என்பது, இயம்பினி, என்பால்வைத்த காதலான்; இனிவேறு எண்ணக்கடவது என்? கதிரோன் மைந்த! கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி - - என்றான்." - கம்ப 6481
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/264
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை