உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 245 தன் விருப்பத்துக்கு மாறாக அனைவரும் கூறிய முடிவை மாற்றி, தன் கருத்துக்கு இசையுமாறு செய்ய இராகவன் கையாண்ட வழி மிக அற்புதமானது. "என்மேல் வைத்த எல்லையில்லாத அன்பு காரணமாக அபயம் என்று கூறினவுடனேயே அபயம் கொடுப்பது தான் நம்முடைய கடமை ஆகும் என்று நீங்கள் கூறினமை குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனவே, கதிரோன் மைந்தனாகிய சுக்கிரீவா! நீயே சென்று அவனை என்வயின் அழைத்துவா" என்று கூறிவிட்டான். 'ஈதலே கடப்பாடு என்பது இயம்பினரீர்” என்ற முன்னிலைப் பன்மை மூலம், அங்கிருந்தோர் அனைவரும் அபயதானம் கொடுப்பதே சிறந்தது என்று கூறியதாக இராமன் முத்தாய்ப்பு வைத்து விட்டான். 'நாங்கள் அப்படிச் சொல்லவில்லை என்று யாரேனும் துணிந்து எழுந்து கூறிவிட்டால் என்ன செய்வது? அப்படி நேராதிருக்க, அணைபோடு முறையில் "நீங்கள் அபயதானம் கொடுக்க வேண்டும் என்று கூறியதே என்பால் வைத்த காதலால் தானே" என்ற ஒன்றையும் இணைத்துக் கூறி விட்டான். அவன் கூற்றை மறுத்தால் அவன்மேல் அன்பில்லை என்று ஆகிவிடும். ஆகவே, அனைவரும் வாய்மூடி இருந்தனர். 'வீடணனை விடவே கூடாது' என்று வாதத்தை முதன் முதலில் தொடங்கிய சுக்கிரீவனைப் பார்த்து, "கதிரோன் மைந்த நீயே குற்றமற்ற வீடணனை என்வயின் கொணர்தி" என்று ஆணை இடுவதன் மூலம் ஒரு மாபெரும் பிரச்சனைக்குத் தன் சொற்களாலேயே பிறர்மனம் நோகாமல் ஒரு முடிவைக் கண்டுவிட்டான் இராகவன். வள்ளுவப் பேராசானின், சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. - குறள் - 645 என்ற குறளுக்கும்,
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/265
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை