பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ேே. இராமன் - பன்முக நோக்கில் விரைந்த தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். - குறள் - 648 என்ற குறளுக்கும் இராகவன் இலக்கணமாகத் திகழ்வதைக் காணலாம். இரலைக் குன்றில் பயந்து, நடுங்கி, ஒளிந்து வாழ்ந்த ஒருவனுக்கு இழந்த தாரமொடு எதிர்பாராத தலைமையும் தருகிறான் ஒருவன். முடிசூட்டிவிட்டு அரசியலை எப்படி நடத்த வேண்டும் என்றும் மிக நீண்ட பாடம் கற்பிக்கின்றான். என்றாலும் என்ன? கார்காலம் முடிந்தவுடன் படையொடு உதவ வருகிறேன் என்று சொல்லிச் சென்றவன் இத்தனையும் தனக்குத் தந்தவனை அடியோடு மறந்துவிட்டான். குடிவெறியுடன், காமக்களி ஆட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும் ஒருவன் எவ்வாறு நன்றி பாராட்ட முடியும். சுக்கிரீவனைப் பொறுத்தமட்டும் உயிரச்சம் ஒன்றுதான் தலையாய பண்பாகும். இராமனைச் சந்தித்தவுடன் முதன்முதலில் அவன் பேசிய வாசகம், ஆருயிர் துறக்கல் ஆற்றேன்' என்பதாகும். உயிரின் மேல் அவனுக்கிருந்த ஆசையைக் கண்டு கொண்ட இராகவன் பரிதாபத்திற்கும், இரக்கத்திற்கும் உரிய பொருளாகவே அவனைக் கண்டான். அதனால்தான் கார்காலம் முடிந்தவுடன் அவன் வராமைக் கண்ட இராகவன் மிகுந்த கோபத்துடன் இலக்குவனை அனுப்பும் பொழுது வாலியையே கொன்ற அம்பும் கொம்பும் தன்பால் இன்னமும் உள்ளன என்ற சொல்லி அனுப்பினான். அனுமனையும் படையையும் தந்தி உதவியது தவிர பெரிய உதவி எதையும் சுக்கிரீவன் செய்ததாகத் தெரியவில்லை. தன் அவசர புத்தியாலும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமையாலும் சுக்கிரீவன் செய்த செயலால் இராமனைப் பெருவருத்தத்திற்கும், துன்பத்திற்கும் ஆளாக்கி விடுகிறான்.