உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 247 இராவணன் தன் அரண்மனையின் கோபுரங்கள் மேல் ஏறி நின்று, நெடுந்துரத்தில் உள்ள இராமனையும், அவன் உடன் இருந்தோரையும் உன்னிப்பாக கவனிக்கலானான். அதுகண்ட இராகவன் பக்கத்தில் நின்ற வீடணனை நோக்கி, "அங்கு நின்றவர்கள் யார் யார் என நான் அறிந்து கொள்ளுமாறு கூறுக' என்று கட்டளையிட்டான். இராவணனை முதன் முதலில் அடையாளம் காட்டியவன் வீடணன். அவன்தான் இராவணன் என்று வீடணன் காட்டியதும், பக்கத்தில் நின்று கொண்டிருந்த சுக்கிரீவன் ஒரு வினாடியில் விண்ணில் பாய்ந்து சென்று இராவணன் எதிரே குதித்தான். இருவருக்கும் மற்போர் தொடங்கியது. நீண்டநேரம் போர் நடைபெற்றது. தன் அடைக்கலப் பொருளான சுக்கிரீவன் இராவணனிடம் போய் அகப்பட்டுக் கொண்டானே, மீண்டு வருவது என்பது முடியாதகாரியம் ஆயிற்றே என்று நினைந்த இராமன் நெஞ்சழுங்கிப் புலம்பத் தொடங்கினான். இறுதியாக இராவணன் முடி ஒன்றைப் பறித்துக் கொண்டு கதிரோன் மைந்தனாகிய சுக்ரீவன் இராமனிடம் வந்து அவன் திருவடியில் கிரீடத்தை வைத்து வணங்கி நின்றான். இராவணன் முடியைப் பறிப்பது என்பது இயலாத காரியம்தான். அந்த மாபெரும் செயலை நிகழ்த்தியவர் இருவர். ஒருவன் கழுகின் வேந்தன், மற்றொருவன் கதிரோன் மைந்தன். தன்வலி, மாற்றான் வலி என்ற இரண்டையும் சீர்தூக்கிப் பாராமல் அவசரப்பட்டு சுக்கிரீவன் செய்த செயல் போற்றத் தக்கதாயினும் இராகவனுக்குச் சில நாழிகை நேரம் மாபெரும் துயரத்தைத் தந்தது என்பது உண்மைதான். என்றாலும், இராகவன் பால் அவன் கொண்டிருந்த அன்பை நினைத்துத்தான் தன் தம்பியருள் ஒருவனாக அவனை ஏற்றுக் கொள்கிறான். பிழை பொறுத்து ஆள்வான் மகுடபங்கப் படலத்தில், சுக்கிரீவன் தன் அவசர புத்தியால் பெரிய சிக்கலை உண்டாக்கி விட்டான். திடீரென்று இராவணன் மேல் பாய்ந்த அவன்,
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/267
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை