248 36 இராமன் - பன்முக நோக்கில் இராவணனுடன் போர் செய்யத் தொடங்கி விட்டான். நெடுநேரம் சுக்கிரீவன் வராமையாலும், அவன் என்ன ஆனான் என்று தெரியாமையாலும் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறான் இராமன். நடைபெற்ற செயலுக்கு இராகவன் எவ்விதத்திலும் பொறுப்பில்லை. மூன்று உலகங்களையும் கட்டி ஆளும் இராவணன் வன்மை என்ன என்று தெரிந்திருந்தும் வானரர்களுக்கே உரிய அவசர புத்தியால் இப்பெருந்தொல்லையை ஏற்படுத்திக்கொண்டான் சுக்கிரீவன். இப்பொழுது தவறு யாருடையது என்பதல்ல பிரச்சினை. இராமனைப் பொறுத்தவரையில் தன் அடைக்கலப் பொருளாகிய சுக்கிரீவனை இழந்தால், தான் இராவணனை வெற்றி கொண்டாலும், சீதையை மீட்டாலும் பயனில்லை என்று கருதுகிறான் இராமன். மனமழிந்து சுக்கிரீவனை நினைத்து அவன் புலம்புதலைக் கவிஞன் இதோ தெரிவிக்கிறான்: "ஒன்றிய உணர்வே ஆய ஒர் உயிர்த் துணைவ! Զ-6 մ 6t)65T இன்றி யான் உளனாய் நின்று, ஒன்று இயற்றுவது இயைவது அன்றால், அன்றியும், துயரத்துஇட்டாய், அமரரை அரக்கர்க்குஎல்லாம் வென்றியும் கொடுத்தாய் என்னைக் கெடுத்தது உன் வெகுளி" என்றான். - கம்ப. 6921 வையம் ஒர் ஏழும்பெற்றால், வாழ்வெனே? வாய் ஆகில் உய்வெனே? - தமியனேனுக்கு உயிர்தந்த உதவியோனே! - - கம்ப. 6922
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/268
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை