பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் 38 9 கம்பன் காப்பியத்தின் கட்டுக் கோப்பில் நடுநாயகமாக விளங்கும் இராமன் பல பகுதிகளில் வெளிப்பட்டும் சில பகுதிகளில் வெளிப்படாமலும், காப்பியத்தைத் தாங்கும் ஆணிவேராகவும், முடிமணியாகவும் விளங்குகின்றான். கம்ப நாடன் பெரும்பாலும், ஏறத்தாழ எழுபது சதவிகிதம் வான்மீகியைப் பின்பற்றியே பாடிச் செல்கிறான் என்பதை அறிதல் வேண்டும். தன் காப்பிய அமைப்புக்குத் தேவைப்பட்ட இடங்களில் கதைப் போக்கை மாற்றுகிறான், புதிய வடிவைக் கொடுக்கிறான் என்பதும் உண்மைதான். காப்பிய நாயகனாகிய இராமனைப் படைப்பதில் வான்மீகத்தினை எந்த அளவு பின்பற்றுகிறான் என்பதைக் கணித்துக் காண்பதே இந்நூலின் நோக்கமாகும். முக்கியமாகத் தன்னுடைய தமிழ்க் காப்பியத்தில் இராமன் எவ்வாறு பேசப்படுகிறான் என்பதைக் காட்டுவதே இந்நூலின் முயற்சி ஆகும். வான்மீகத்திலும், பிற வடமொழி இராமாயணங்களிலும் காணப்படாத சில குறிப்புகள் பழமையான சங்க இலக்கியத் திலும், பெயர் குறிக்காமல் தொல்காப்பிய உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டிய பாடல்களிலும் காணப்படுகின்றன. செவிவழிக் கதைகள் பல இன்னதைத்தான் குறிக்கின்றன என்று புரிந்துகொள்ள முடிகிறது; சில கதைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதும் உண்மைதான். புரிந்துகொள்ளக்கூடிய கதைகளில் இராமனைப் பற்றிய இரண்டு குறிப்புக்கள் இங்கு அறிய வேண்டியவை. பெருநகைக்குரிய செயல் புறநானூற்றில் நகையை உண்டாக்கும் ஒரு நிகழ்ச்சியைக் கூறும்பொழுது இராமகாதை பேசப்படுகிறது. சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் பாட வருகின்றார். - சோழனுடைய அரண்மனையில் பாணர்கள் தடாரிப் பறையை முழக்கிக்கொண்டு, பகைவர்மேற் செல்லும் அவனுடைய சிறப்பைப் பாடினர். உடனே, சோழன் மிகச்