250 36 இராமன் - பன்முக நோக்கில் என்று கேட்டால் கொடுத்தே தீர வேண்டும். அவ்வாறு கொடுப்பதன் மூலம் கொடுத்தவனுக்கு அழிவு நேரும் என்றால், அந்த அழிவையும் நாம் வரவேற்று ஏற்றுக் கொள்வதே புகழ் தருவதாகும். தந்தை தாய்க் கொலை செய்தவர்கள்கூட அடைக்கலம் என்று வந்து கேட்ால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது மனிதப் பண்புக்கு அப்பால் மேம்பட்டதாகும். இறைவன் ஒருவன்தான் நாம் செய்யும் அத்தனைப் பிழைகளையும் பொறுத்து நமக்கு வாழ்வளிக்கிறான். அடைக்கலம் காப்பது பற்றி இராமன் கூறும் சொற்களைத் தொகுத்துப் பார்த்தால் அவை தசரதராமன் பேசிய பேச்சுக்கள் என்று நினைப்பதைவிட மூலஇராமன் பேசிய பேச்சுக்கள் என்று கொள்வதே பொருத்தமாகும். அடைக்கலம் காப்பதற்காகச் சடாயு உயிர் விட்டதை நினைந்து பெருமைப்படும் இராகவன், மனித சாதிக்கே ஒரு வழிகாட்டியாக விளங்குகிறான். வீடணனும் இராமனும் எப்போது வெளியேறினான் இராவணன் மந்திராலோசனை சபையில் வீடணன் பெரும்பணி புரிக்கின்றான். அவன் உறங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அவனுடைய அரண்மனையிலேயே மறைந்து நின்று அவனைக் கண்ட மாருதி, ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் (4970) என்றும், அவனுடைய வீடு அந்தணர் மனை எனப் பொலிந்தது (646) என்றும் கூறியுள்ளான். இராமனைப் பற்றி முன்னரே கேள்வியுற்றிருந்த வீடணன் தன் ஞானத்தால் இராகவன் வெறும் மனிதனல்லன், தசரதன் மகனாய்ப் பிறந்தவன் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக உலகிடைப் பிறந்த மூலப் பரம்பொருளே என்பதை நன்கு அறிந்திருந்தான். இராமன் யார் என்பதைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் மந்திராலோசனை சபையில் கூறியவன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/270
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை