பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 25i வீடணனே ஆவான். இராவணனின் பெருமன்றத்தில் கும்பகர்ணனைத் தவிர அவன் கூற்றை செவிமடுப்பார் யாருமில்லை. இறுதியாக, விழி எதிர் நிற்றியேல் விளிதி (6372) என்று அண்ணன் கூறிவிட்டபின் இராவணனை விடுத்து வெளியேறினான். வெளியேறி, விண்ணிடை வந்து நின்ற அவனுக்கு நான்கு நண்பர்கள் உடன் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் சொன்ன அறவுரையின் பேரில்தான் இராமனிடம் செல்ல முடிவு செய்தான். சரணடையத் தானாக முடிவெடுக்கவில்லை - ஏன்? இராமன் இன்னான் என்று தெரிந்திருந்தும் இவனாகவே ஏன் அந்த முடிவை எடுக்கவில்லை என்ற வினா தோன்றினால், அது நியாயமானதே ஆகும். தேவர்களுக்கு இடுக்கண் செய்து, இறுதியாகப் பிராட்டியையும் கவர்ந்து கொண்டு வந்த ஒருவனின் தம்பியை இராகவன் எப்படி ஏற்றுக் கொள்வான் என்ற ஐயம் அவன் மனத்திடை இருந்தது. அப்படியானால், நண்பர்கள் கூறியதும் தன் ஐயத்தை உதறிவிட்டு உடனே இராமனிடம் வர என்ன நிகழ்ந்தது? இலங்கைக்கு மீண்டு போகும் நிலையில்லை. அடுத்து உள்ளது ஒரே வழிதான். இராமன் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவனிடம் சரணம் என்று செல்வதுதான் ஒரே வழி. மீண்டுசென்று இராவணன் கையால் மடிவதைத் தவிர்த்து, இராமன் கையால் மடியும் நிலை ஏற்பட்டால் அதுவே தனக்கு உய்கதி என்ற முடிவுக்கு வந்தான். . அவன் வருகை இராமனுக்கு அறிவிக்கப்பட்டபோது நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, சுக்கிரீவனை விட்டே அவனை அழைத்து வரச் சொல்கிறான். சுக்கிரீவன் வருக என்று அழைத்ததும், வீடணன் பேசிய வார்த்தைகள் அவனையும் அவன் மனத்தில் ஒடிய எண்ணங்களையும் காட்டுவன வாகும்.