252 38 இராமன் - பன்முக நோக்கில் "பஞ்சு" எனச்சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்தபாவி வஞ்சனுக்கு இளைய என்னை, "வருக!" என்று அருள் செய்தானோ? தஞ்சு எனக் கருதினானோ? தாழ் சடைக் கடவுள் உண்ட நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் நாயேன்? - கம்ப 6487 'பஞ்சு என்று சொல்லும்போதே சிவக்கும்படியான பாதத்தை உடைய பிராட்டியை வஞ்சகமாகக் கவர்ந்து வந்தவனின் தம்பி நான் என்பதை அறிந்தும், வருக என்று அருள் பாலித்தானா? என்னையும் அடைக்கலத்துக்குரியவன் என்று கருதிவிட்டானா? அவனுடைய அருளின் எதிரே, சிவபெருமானுண்ட நஞ்சைவிடக் கொடியவன் அல்லவா நான்?. இவ்வாறு வியப்போடுகூடிய தன் மகிழ்ச்சியை வீடணன் புலப்படுத்தினான். மூன்றாம், நான்காம் அடிகள் அவன் மன ஓட்டத்தைத் தெரிவிக்கின்றன. "தன் குலப் பகைவனின் தம்பி என்று அறிந்திருந்தும் வருக" என்று அருளிச் செய்தானோ? தஞ்சம் தரக்கூடிய பொருள் நான் என்று அவன் கருதினானா' என்று அவன் பேசும் பேச்சுக்கள் இராகவன் தன்னை ஏற்றுக் கொள்ளமாட்டான், அடைக்கலம் தரமாட்டான் என்று அவன் மனத்திலிருந்த எண்ணத்தை வெளிப்படுத்துவன ஆகும். நஞ்சு உவமை விளக்கம் "சாதாரண காலத்தில் எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப் படக்கூடிய நஞ்சு, சிவபெருமான் உண்டதும் எல்லோராலும் போற்றி வணங்கக்கூடிய சிறப்பைப் பெற்றுவிட்டது. அதே போன்று இராவணன் தம்பி என்று அனைவராலும் ஒதுக்கப் பட்ட நான், இப்பெருமானுடைய அருளால் அனைவரும் விரும்பி ஏற்கத் தக்கவன் ஆகிவிட்டேன்."
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/272
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை