254 38 இராமன் - பன்முக நோக்கில் அவசியம் இல்லை. அவனைப் போகச் சொல் என்ற முடிவுக்கு வரலாம்; இன்றேல், ஏற்றுக் கொள்ளுகிறேன். அவனை வரச் சொல்' என்ற முடிவுக்கும் வரலாம். இரண்டாவது முடிவின்படி செயலாற்ற வேண்டுமேயானால் அது அருளுடையவர்களால்மட்டுமே முடியும். அதை நினைந்துதான் செய்யும் அருள் இதுவாகில்' என்று பேசுகிறான் வீடணன். ஆற்றலும், அருளும் ஒருசேர உடையவன் பரம்பொருள் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் அரக்கர் வாழ்வு அஸ்தமிக்கும் என்பது தேற்றம். இந்த இரண்டு பாடல்களில் (6489 - 90) அவற்றில் தருக்கரீதியாக அவன் பெறும் முடிவுகளும் வீடணன் மாபெரும் அறிவாளி என்பதைக் காட்டி நிற்கும். இராமனுடன் சேர்ந்த தம்பிகளில் மூன்றாமவனாக உள்ள வீடணன் 'கவிஞனின் அறிவுமிக்க வனாகவும், உம்பரின் ஒரு முழம் உயர்ந்த ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான் என்பதில் ஐயமில்லை. கும்பகர்ணன் அறிமுகம் அடுத்து, இராவணன் புலத்தில் இருக்கும் வீரர்கள் ஒவ்வொருவரையும்பற்றிப் பாசறையிலும் போர்க்களத்திலும் வீடணன் பேசுவதைப் பார்த்தால், இராவணன் முதல் கும்பகர்ணன் வரை அனைவருடைய ஆற்றல், வரபலம், தகுதி, அவர்களிடம் உள்ள குறைபாடுகள் ஆகிய அனைத்தை யும் மிக நன்றாக அறிந்திருக்கிறான் என்பதை அறியமுடியும். போர்க்களத்தில் கும்பகர்ணன் வந்து நிற்கின்றான். மாவீரனான இராகவன், "எதிரே நிற்கும் இவனுடைய ஒரு தோளில் இருந்து மறுதோளைப் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டுமானால் பல நாட்கள் கழியும் போல் இருக்கிறதே! இரண்டு கால்களை உடைய ஒரு மலை வந்து நிற்கிறதா? போர் செய்ய வந்த ஒர் ஆள் என்று நினைக்க முடியவில்லை." (7382)
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/274
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை