256 38 இராமன் - பன்முக நோக்கில் விற்பிடித்த கை நடுங்கிற்று என்று பாடுகிறான் கவிஞன். மூங்கில் நிறைந்த மலை ஒன்றை நாவினால் பறித்து வாய்க்குள் செலுத்தி,துப்புவது போல எறியவும், பிலம் திறந்தது போன்று, அவ்வாயிலிருந்து புறப்பட்ட மலையை இராமன் மேல் வீச, இராகவனின் வில் பிடித்த கை நடுங்கிற்று என்ற பொருளில், வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி, பேயின் ஆர்ப்புடைப் பெருங்களம் எரிந்து எழ, பிலம் திறந்தது போலும் வாயினால் செல, விசினன், வள்ளலும் மலர்க் கரம் விதிர்ப்புற்றான். . கம்ப. 7621 இராகவன் இலங்கையிற் செய்த போரில் அப்பெருமா னுடைய கை நடுங்கிய ஒரே ஒரு இடம் வில், வாள் முதலிய எந்தப் படையும் இல்லாமல் கும்பன் வாயினால் செய்த போரிலேயே ஆகும். இதனை அடுத்துத் துய மாவீரனாகிய கும்பன் எதிரியை நன்கு அறிந்துகொண்டான் ஆதலின், "அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் ◌ouli.............................................. - - கம்ப. 7622 என்ற முடிவுக்கு வந்து, தன் தமையனின் முடிவை எண்ணி வருந்தினான். இறுதியாக, இறக்கும் தறுவாயில் இரண்டு வரங்களை இராமனிடம் வேண்டினான். முதலாவது வரம், "ஐயனே! உடன்பிறந்த தம்பி என்றும் பாராமல் தகவிலானாகிய என் அண்ணன் வீடணனைக் கண்டால் கொன்று விடுவான். எக் காரணத்தைக் கொண்டும் உன் தம்பி, நீ, அனுமன் என்ற மூவரில் யாருடனாவது பிரியாமல் என் தம்பி வீடணன் இருக்குமாறு நீ வரம் அருளவேண்டும்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/276
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை