உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 257 "தம்பி என நினைந்து, இரங்கித் தவிரான், அத் தகவு இல்லான்; நம்பி! இவன்தனைக் காணின் கொல்லும், இறை - நல்கானால், உம்பியைத்தான், உன்னைத்தான், அனுமனைத்தான், ஒரு பொழுதும் எம்பி பிரியானாக அருளுதி; யான் வேண்டினென். - - - கம்ப. 7627 இரண்டாவது வரம், "இன்றுவரை என்னை வெல்வார் யாருமில்லை ஆதலால் மானத்தோடு வாழ்ந்து விட்டேன். இப்பொழுது கக்ரீவன் எம் மூக்கைக் கடித்து விட்டதால் நான் இறந்தபிறகு என் பகைவர்களாகிய தேவர்களும், முனிவர் களும் மூக்கிலா முகம் என்று எள்ளி நகையாடுவார்கள். ஆகையால் துன் கணையால் என் கழுத்தை நீக்கி, என் முகத்தைக் கருங்கடலுள் போக்குவாய்” என்று வேண்டுவ தாகும். அருளுடை ஆழியான் அவனுடைய வேண்டுதலை இரண்டு வரங்களையும் தந்து நிறைவேற்றினான். வந்துசேர்ந்த தம்பியரில் ஒருவனாகிய வீடணனைப் பற்றிப் பேசும் இடத்தில், வந்துசேர மறுத்தவனாகிய கும்பகருணனைப் பற்றி இத்துணை விரிவாக விவரம் தந்தது ஏன் ? இப்படி ஒர் ஐயம் எழுவது இயல்பே. இந்த ஐயத்தையே ஆழ்ந்து நோக்கினால் ஓர் உண்மை விளங்கும். மிகப் பேராற்றலும் நல்லற நாட்டமும் கொண்ட கும்பகருணனும் இராமன் பக்கத்தில் இருந்தால் நல்லது என்ற எண்ணத்தைக் கவிச்சக்கரவர்த்தி எழுப்புகிறான். பாத்திரங்கள் வாயிலாக எழுந்த கருத்துத்தான்; என்றாலும், கவிஞன் எழுப்புவதுதானே? இராமன் பக்கம் தன் தமையன் இருந்தால் நல்லது என்ற எண்ணம் வீடணனும் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான். கும்பகருணனிடம் சென்று இந்த முயற்சியை மேற்கொள்வது யார் என்ற கேள்வி வந்தபோது, 'அடியனே சென்று, அவனை உள்ளம் சேகு அறத் தெருட்டி, ஈண்டுச் சேருமேல் சேர்ப்பென் அ-17
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/277
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை