260 36 இராமன் - பன்முக நோக்கில் இலக்குவன் திறத்தை வீடணன் அறியவேண்டும்' இதுவரை இலக்குவன் தனிநின்று போர் செய்யும் வாய்ப்பு கிட்டவில்லை ஆதலால், அவனைப்பற்றி வீடணன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இராகவன் வீடணன் சொன்னதை யெல்லாம் ஏற்றுக்கொண்டு இலக்குவன் யார் என்பதை வீடணனுக்கு 5 பாடல்களில் (7802 - 7806) அறிவிக்கின்றான். மிகுந்த புன்சிரிப்புடன் இராமன் கூறியதாவது:"எண்ணாயிரம் இராவணர்களும், தேவர்களும், வேறு உலகில் உள்ள எவராய் இருப்பினும் அவர்களும், யாரும் அடைய முடியாத மும்மூர்த்திகளும், ஒருசேர வந்தாலும் இவன் அவர்களோடு எப்படிப் போர் செய்கிறான் என்பதை நீ சென்று உன் கண்ணாலேயே காண்பாயாக." (7803) "என் தம்பி போர்புரிய முடிவு செய்துவிட்டால் ஆகாயம், பூமி, விற்பிடித்தவர்கள் என்னுள்பட யாராக இருப்பினும், ஈசன், இந்திரன் ஆகிய யாராக இருப்பினும் தம்பியின் முன் நில்லார்." (7804) "என் தேவியைப் பிரிக்கவந்த இராவணன் பிழைத்த காரணம் என்னவென்றால், தேவியின் கட்டளையை மீற முடியாமல் இவன் அவ்விடத்தை விட்டு வந்ததுதான். இன்றேல் இராவணன் கதை அன்றே முடிந்திருக்கும்." (7806) இராமனுடைய வீரத்தை, போர்த்திறத்தை முதற்போரி லும், கும்பன் போரிலும் நேரில் கண்ட வீடணன், இலக்குவனை அறிந்துகொள்ள இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறான் இராகவன். பின்னர் நிகழப்போகும் இந்திரசித்தன் போர் முதலியவற்றில் உடன் இருக்கப் போகின்றவன் வீடணன்; ஆதலால் இலக்குவன் செய்யும் முதற் போரை வீடணன் நேரே காண வேண்டும் என்ற இராகவனின் திட்டம் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு செய்யப்பட்டதாகும். எண்ணாயிரம் இராவணர்களும், திரிமூர்த்திகளும், இந்திரனும்கூட இலக்குவன் எதிரே நிற்க முடியாது என்று
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/280
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை