பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ே 263 செய்யாதபோது வீடணன் மேல் குற்றம் சுமத்திய இராகவன் இலக்குவன் வெற்றியில் ஒரு சிறு பங்குகூட உதவி செய்யாத வீடணனுக்குப் புகழாரம் சூட்டினான். ஆழ்ந்து நோக்கினால் அவசரப்பட்டுக் குற்றம் சுமத்தியதற்கு வருந்தி அதற்குக் கழுவாயாக இப்பொழுது அந்தப் புகழுரையைத் தந்தான் என்று நினைப்பதில் தவறில்லை. செய்யாமற் செய்த உதவி கதைத் தொடர்ச்சி இருப்பதால், நாகபாசம் நீங்க உதவிய கருடன் செய்தியையும் - மற்றொன்று விரித்தலாக அல்லாமல் இடைப் பிறவரலாக ஒரளவு காண்போம். தசரத குமாரன் இராமானுஜனாகிய தம்பிமேல் கொண்ட காதல் எத்தகையது என்பதை அறிவிக்க இப்பகுதி மிகவும் பயன்படும். நாகபாசத்தில் கட்டுண்டவர்கள் இடர் தீர்க்க மேலுலகத்தில் இருந்து கருடன் வருகின்றான். அவன் நிழல்பட்டதும் நாகபாச பந்தங்கள் இற்று விழுகின்றன. அதில் கட்டுண்ட அனைவரும் எழுந்து ஆரவாரம் செய்தனர். மகிழ்ந்த இராகவன் கருடன் யார் என்று தெரியாமல் அருகில் அழைத்து அவனுக்கு நன்றி பாராட்டுகின்றான். "ஐயனே! நீ யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் முன்னர்ச் செய்த தவத்தின் பயனாக எங்கள் அனைவரையும் உயிர்ப்பித்தாய். எங்கள் நன்றிக்கு அடையாள மாக உனக்கு ஏதாவது கையுறை தரவேண்டும் என்று விரும்பினாலும் அதனை ஏற்பவனாக நீ காணப்படவில்லை. (8268) "நீ முன்னர் எங்களைக் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. நாங்களும் அவ்வாறே அப்படி இருக்க ஒரு பேருபகாரம் செய்து எங்குளைக் கடனாளி யாக்கிவிட்டாய். உடலுள் இருக்கின்றதோ இல்லையோ என்று ஐயப்படும் அளவிற்கு வந்துவிட்ட எங்கள் உயிரை நீ இப்பொழுது தந்தாய். ஐயா! ஒருவேளை முன்னரே நாம் நண்பர்களாக