264 .ே இராமன் - பன்முக நோக்கில் இருந்திருப்பின் இவ்வுதவி முறையான தாகும். அதுவும் இல்லாதபோது நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தயவுசெய்து சொல் என்கிறான் இராகவன். (8270) தன்னை இன்னார் என்று அடையாளம் கண்டு கொள்ளாத தன் தலைவனாகிய பரம்பொருள், இப்பொழுது எப்படி நன்றி சொல்வது என்று கேட்கிறான். மனம் நெகிழ்ந்து விட்டான், கருடன். உண்மையைச் சொல்வதிலும் பயனில்லை. எனவே, மிக அழகாகவும் சாதுர்யமாகவும் பேசிவிட்டு விடை கூறுகிறான் ஒரு தடுமாற்றமும் கழுவாயும் இனி, பிரம்மாத்திரப் படலத்தில் இலக்குவன், அனுமன் முதலானோர் வீழ்ந்து கிடக்கையில் அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறிந்துகொண்ட காரணத்தால் இராகவன் யார் மேலும் குற்றம் சுமத்தவில்லை. வீடணன் செய்த பேருதவி மற்றொன்று அடுத்து வீடணன் இராமனுக்குப் பேருதவி செய்த இடம் மாயா சீதைப் படலத்தில் வருகிறது. ஓர் அரக்கியைச் சீதை வடிவம் கொள்ளச் செய்து, அனுமன் எவ்வளவு வேண்டியும் அவளை வெட்டிச் சாய்த்துவிட்டு, "இந்த வினாடியே அயோத்தி சென்று பரதனையும், தாய்மார்களை யும் ஒரு நொடியில் ஒழித்துக் கட்டுகிறேன் பார் என்று புட்பக விமானத்தில் ஏறி இந்திரசித்தன் சென்றுவிட்டான் அதை உண்மை என்று நம்பிய அறிவாளியாகிய அனுமன்கூட இராகவனிடம் வந்து சொல்ல, இராம இலக்குவர்கள் துயர்த் கடலுள் மூழ்கினர். பிராட்டி வெட்டுண்டாள் என்பதை இராகவனே நம்பிவிட்டான் என்பது இராமனை அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும். அதனைப் பற்றி இராகவன் நினைப்பதற்கு முன்னர் அதைவிடப் பெரிய துயரச்செய்தி அவன் செவிகளில் புகுந்தது. தன் பகைமை காரணமாக ஒரு பாவமும் அறியாத தாயரும்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/284
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை