உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ே 265 தம்பியரும் இந்திரசித்தனால் கொல்லப்படுவது இராமனால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். திரும் இச் சீதையொடும் என்கிலது அன்று, என் தீமை; வேரொடு முடிப்பது ஆக விளைந்தது (8915) என்ற முறையில் இராகவன் புலம்புவது பிராட்டி கொல்லப்பட்டாள் என்பதை அவன் நம்பினான்’ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இனிவரும் பாடலில், 总总减端时 . வினையேன் வந்த மனைபொடிபட்டது, அங்கு மாண்டது, தாரம் ஈண்டும்;" . கம்ப. 8916 என்றும் வருந்துகிறான். - தான் பிறந்த பாவத்தால், பெண் ஒருத்தி காரணமாகத் தான் பிறந்த நாடும் தம்பியரும் தாயரும் துயர் படப்போகிறார்கள் என்ற நினைவு வந்தவுடன் தன்னைத் தானே நொந்து கொள்கிறான். என்னுடைய பாவம் பெற்ற தாதைக்கும் காவல் செய்த சிறிய தாதை சடாயுவுக்கும் தமியள் ஆய சீதைக்கும் எமனைக் காட்டி அவனிடம் அனுப்பியது. இந்த இந்திரசித்தன் தன் பாசத்தையும் தெய்வப் படைகளையும் ஏவினால் என் தாயர், தம்பியரைக் காக்கக் கருடன் அங்கே வரப் போவதில்லை, மருத்துமலை கொண்டுவர அனுமன் அங்கு இல்லை. அவர்கள் உயிரை யார் மீட்டுத் தருவார்கள் (8918) என்று துயரக் கடலின் கரைகாணாது புலம்பும் இராகவனை நோக்கி, அனுமன் பேசலானான்: - "ஐயன்மீர்! சோதரர் இருவரும் என் தோள்களில் ஏறிக் கொண்டால், இந்திரசித்தன் செல்லும் புட்பகத்தைவிட வேகமாகச் சென்று அவன் வருவதற்குள் உங்களை அயோத்தியில் இருக்குமாறு செய்வேன்” என்றவுடன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/285
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை